எதிர்நீச்சல்: குணசேகரன் செய்யும் சூழ்ச்சி.. மாட்டிக்கொண்ட கதிர்.. அப்பத்தாவின் அதிரடியான செயல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவிடம் ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற கதிர் அடிக்கப் போகிறார்.
அப்பத்தாவுக்கு எதிராக குணசேகரன் செய்ய இருக்கும் பிளான்களை முதல்முறையாக சக்தி இடம் கூறியிருக்கிறார்.
குலசேகரனுக்கு எதிராக அப்பத்தா புது முடிவை எடுத்திருக்கிறார்.
தர்ஷன் முதல் முறையாக ஈஸ்வரி இடம் தான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

குணசேகரனின் மாஸ்டர் பிளான்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதிர் அப்பத்தாவிடம் ஜெனனியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நம்ம வீட்டுக்கு போலீசை கொண்டு வந்து விட்டார் என்று கோபத்தோடு திட்டி ஜனனியை அடிக்க பாய, குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கதிரை பிடித்து கொள்கின்றனர். பின்பு கதிரை தனியாக அழைத்து நீ இப்போது கோபப்படாதே நான் உங்கள் விஷயத்தில் புது முடிவு எடுத்திருக்கேன். நமக்கு நம்முடைய சொத்து திரும்ப வரணும் அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். அப்பத்தாவுடன் நாம் ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு என்னுடைய பிளானுக்கு அப்பத்தா சரிப்பட்டு வரவில்லை என்றால் அப்போது சோழியை முடித்து விடலாம். நாம் ஏதாவது செஞ்சாலும் பழி நம்ம மீது வராது. அது ஜனனி மீது தான் வரும் என்று கூறுகிறார்.

அப்பத்தாவின் முடிவு
குணசேகரனின் பிளான் தெரிந்து கொண்ட கதிர் அதற்குப் பிறகு குணசேகரன் சொன்னதால் அப்பத்தாவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். மொத்த குடும்பமும் தன்னிடம் வந்து மீண்டும் பேசுவதை பார்த்து அப்பத்தான் இவர்கள் எல்லாம் இப்படி லேசு பட்டவர்கள் கிடையாது. இவர்கள் நடிப்பது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது. இவர்களிடம் நாம் கவனமாக தான் இருக்க வேண்டும். நான் செய்திருக்கும் வேலை உங்கள் எல்லோருக்கும் சரியாக நடக்கிற வரைக்கும் நான் உயிரோடு இருக்க வேண்டும். அதனாலே இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மாட்டிக்கொண்ட கதிர்
பின்பு இரவு ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மூவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குணசேகரன் நடந்து கொள்வதை குறித்து இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எதனால் இப்படி பெரியவர் நடந்து கொள்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த பணத்திற்காக தான் இவர் இப்படி நடந்து கொள்கிறாரா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். கதிர் அவ்வளவு கோபப்பட்டு கொண்டிருந்தாலும் குணசேகரன் என்ன பேசியதால் கதிர் கோபம் குறைந்திருக்கும் என்று இவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே தர்ஷன் வருகிறார்.

மனம் மாறிய தர்ஷன்
தர்ஷன் ஈஸ்வரி இடம் மன்னிப்பு கேட்க, இதுவரைக்கும் செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று மீண்டும் ஈஸ்வரியிடம் கேட்க, முயற்சிகள் நடந்ததும் மன்னிப்பு கேட்காமல் இன்று வந்து கேட்டதில் இருந்தே தெரிகிறது நீ உன்னுடைய தவறை புரிந்து கொண்டிருக்கிறார் என்று, நீ இந்த வீட்டில் உன்னுடைய அப்பா, சித்தப்பா செய்கிற விஷயங்களை பார்த்து தான் அப்படி மாறி இருக்கிறாய், அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கெட்ட விஷயங்களை விட்டு விடு, அதுபோல இங்கே இருக்கும் அப்பத்தா பாட்டி எப்பவாவது குளிக்காமல் சாப்பிட்டு பார்த்து இருக்கியா? அதுவும் ஒரு நல்ல விஷயம், அப்படி ஒரு நல்ல விஷயத்தை மட்டும் அனைவரிடமிருந்து எடுத்துக் கொள், இப்போது இருக்கிற சூழ்நிலையில் எப்படி பிற்போக்குத்தனமாக இருந்தால் அனைவரும் நம்மை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறி சென்று கொண்டே இருப்பார்கள் என பேசிக் கொண்டிருக்கிறார். பின்பு தர்ஷன் ஈஸ்வரியின் மடியில் படுத்து கண்ணீர் விடுகிறார். இது தொடர் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications