சத்தம் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் செய்த சாதனை.. கொண்டாடிய நடிகர்கள்..காரணம் இதுதானாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது 300 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இந்த வெற்றியை சீரியல் நடிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.
சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக தாண்டியதற்கு ரசிகர்களிடம் நன்றி கூறியிருக்கிறார் அந்த சீரியலின் கதாநாயகி ஜனனி.
அதே நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

அதிகரிக்கும் ரசிகர்கள்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் அதைப் பார்த்து வருவார்கள். ஆனால் தற்போது அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் இந்த சீரியலின் வரவேற்பு இளைஞர்களின் மத்தியிலும் நன்றாக இருக்கிறது. இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்களைப் போல இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரிப்பதன் விளைவாகவே இந்த சீரியலில் டிஆர்பியும் முன்னேறி வருகிறது.

டிஆர்பி யில் முன்னணி
2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வாரத்தில் இந்த சீரியல் கடந்த வாரத்தை விடவும் முன்னேறி இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் 9.11இல் இருந்தது. ஆனால் இந்த வாரம் 9.33இல் பெற்று முன்னணியில் இருக்கிறது. இந்த சீரியல் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது தான். இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது பொங்கல் பண்டிகையோடு அப்பத்தாவை காலி செய்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் செய்து இருக்கிறார். இது எப்படி நடக்கப் போகிறதா? அல்லது யாராவது தடுப்பார்களா என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்து வருகிறது.

என்ன நடக்கப் போகிறது
ஏற்கனவே இந்த சீரியலில் முன்னணி கேரக்டராக இருப்பது அப்பத்தா தான். அதனால் அப்பத்தா கேரக்டரை முடித்து விட்டால் சீரியலுக்கு நல்லா இருக்காது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் அணியினர் ஸ்பெஷலான கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கின்றனர். அது வேறு ஒன்றும் இல்லை, இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இதற்கு நன்றி கூறி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கின்றனர்.

ஸ்பெஷல் நன்றிகள்
இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா ரசிகர்களின் சப்போர்ட் மற்றும் அன்பிற்கும் நன்றி என்று சக்தியோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பொங்கல் பண்டிகையோடு இவர்கள் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை சீரியலில் ரசிகர்களும் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications