ராபர்ட்டிடம் அப்படி நடந்துக்க காரணம் இதுதான்.. பிளான் பண்ணி தான் அப்படி! ரகசியங்களை உளறிய ரச்சிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல்முறையாக அந்த நிகழ்ச்சியை பற்றி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய கிரஷ் என்று அளவுக்கு மீறி பழகி வந்ததாக பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
ராபர்ட் மாஸ்டரிடம் தான் அப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்ன என்பதை பற்றி ரச்சிதா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டரின் கிரஷ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிமுகமான சின்னத்திரை நடிகை ரச்சிதாவை பார்த்த முதல் நாளிலிருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா என்னுடைய கிரஷ் என்று கூறி அவர் பின்னாடியே சுற்ற தொடங்கி விட்டார். ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரபலமானவர்தான் அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக ராபர்ட் மாஸ்டரும் ரச்சிதாவை பார்த்து இருந்தாராம். அப்போது இருந்து இவருடைய கிரஷ்ஷாக இருந்திருக்கிறார். ஆனால் முதல் முறையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ரச்சிதாவை பார்த்ததும் இவர் புகழத் தொடங்கி விட்டார். அதுவும் ரச்சிதாவை மூக்குத்தி என்றுதான் செல்லமாக அழைத்து வந்தார். இது ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிகமாக நெகட்டிவ் கருத்துக்கள் வலம் வந்தது.

கணவரின் கண்டிப்பு
ஏற்கனவே ரச்சிதாவிற்கும் அவருடைய காதல் கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல் அநாகரிகம் ஆகவும் தேவையில்லாத விஷயமாகவும் பல தரப்பினராலும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இதைக் குறித்து ரச்சிதாவின் கணவரும் தன்னுடைய கண்டனத்தை சேனல்களில் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும் தன்னுடைய கிரஸ் எப்போதும் ரச்சிதா தான் என்று பேட்டி ஒன்றில் கூட குறிப்பிட்டு இருந்தார்.

வெளியேவும் நடந்திருக்கு
நிலையில் கடந்த வாரம் ரச்சிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து செய்தி சேனல்களில் ராபர்ட் மாஸ்டர் பற்றியே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறதாம். அதனை தெளிவுபடுத்தும் விதமாக ரச்சிதா விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் என்னிடம் கிரஸ் என்று கூறியது எனக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. நான் வேலை பார்க்கும் இடத்திலும் சரி வெளியேயும் சரி பலர் இதேபோல சொல்லி இருக்கிறார்கள். நான் புடவை கட்டி இருப்பதை பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள் .ராபர்ட் மாஸ்டர் போலவே என்னிடம் பலரும் வெளியே நடந்திருக்கிறார்கள். அதனால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

பிளான் செய்த கிண்டல்
சில நேரங்களில் ராபர்ட் மாஸ்டர் வரம்பு மீறி நடந்து கொள்வதாக எனக்கே தெரியும் போது தான் நான் அவர் மீது கோபப்பட்டு திட்டி இருக்கிறேன். அது பலமுறை நடந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருக்கும். வெளி உலக தொடர்பு இல்லாமல் பார்த்த முகங்களையும் மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பதால் அங்கே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏதாவது என்டர்டைன்மென்ட் ஜாலியா இருக்க வேண்டும் என்றோ ஒருவொரு வாரமும் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் கலாய்த்து கிண்டல் செய்து கொண்டிருப்போம். அந்த மாதிரி தான் பலமுறை என்னையும் ராபர்ட் மாஸ்டரையும் வைத்துக் கூட அனைவரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள். உள்ளே நாங்களும் பலரை கிண்டல் செய்து இருக்கிறோம். இதுவே வெளியே வந்து பார்க்கும்போதுதான் இது இப்படி மாறி இருக்கிறது என்று தெரிகிறது என்று ரச்சிதா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

உண்மை இதுதானா
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போது ரச்சிதா நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வீதமாக கலாய்த்து கொண்டு இருப்போம் என்று கூறியதை வைத்து அப்போ பிக் பாஸ் இவர்களுக்கு இப்படித்தான் அறிவுறுத்தி இருக்கிறார்களா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ராபர்ட் மாஸ்டர் ஒரு குழந்தை மாதிரி தான் அவர் வளர்ந்து இருந்தாலும் குழந்தைத்தனமாகத்தான் அவருடைய செயல்பாடு இருக்கும். அதனால் தான் நானும் அதை எந்த இடத்திலும் பெரியது பண்ணவில்லை. ராஜா ராணி டாஸ்க்கில் அவர் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்ததாக எனக்கு தெரிந்ததால் தான் நான் அப்போது திட்டி அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன் என்று விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications