கோபியின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பாக்கியா... கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே..!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது.
ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கோபியின் திருமணம் மணவரை வரை சென்று விட்ட புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
ராதிகா மற்றும் கோபியின் திருமணத்திற்கு பாக்கியா தான் சமையல் செய்யப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் திருமண உடையில் இருக்கும் ராதிகா உடன் பாக்கியாவும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

விறுவிறுப்பான திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதை களம் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்று பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். எப்படியாவது கோபியின் திருமணம் நடக்காமல் இருந்து விட வேண்டும். பாக்கியா பாவம் என்று ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், கோபி அவருக்கு ஆசைப்பட்ட மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என ஒரு தரப்பினர் கோபிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கோபியின் திருமணம் எப்படியும் கடைசி நேரத்தில் நின்று விடும் என்பது பலருடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அவசர ஏற்பாடு
கோபி ராதிகாவை திருமணம் செய்வதற்காக பாக்கியலட்சுமியை டைவர்ஸ் செய்து விட்டார். ஆரம்பத்தில் கோபி பாக்யாவின் கணவர் என்று தெரியாமல் இருந்த ராதிகாவுக்கு கோபியை பற்றிய உண்மை தெரிந்ததும் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் ராதிகாவின் மனதினை மாற்றி தற்போது ராதிகாவும் திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட வெகு சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் திருமணத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என்று கோபி அவசரமாக வேலை செய்து வருகிறார்.

திருமண மண்டபத்தில் பாக்கியா
கோபி தன்னுடைய திருமணத்தை பற்றி அவருடைய அம்மாவிடம் தெரிவித்ததும் அவர் தற்போது கோபியின் தந்தையிடம் கோபியும் திருமணத்தை பற்றி கூறியிருக்கிறார். அவர் நான் எப்படியும் கோபியின் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கோபியின் அம்மா மீது சத்தியம் வேற செய்திருக்கிறார். இந்த நிலையில் கோபியின் திருமணத்தில் ராதிகா மணமேடையில் மணப்பெண் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்ததும் திருமணம் இந்த அளவிற்கு வந்துவிடுமா? ரசிகர்கள் கடைசி நேரத்தில் யாராவது திருமணத்தை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் திருமணத்திற்கு வழக்கமாக பாக்கியா இருக்கும் அதே உடையோடு மண்டபத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

கடைசியில் இப்படி செஞ்சுட்டாங்களே
கடைசியில் கோபியின் திருமணம் நின்று விடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு திருமண மண்டபத்தில் ராதிகாவோடு பாக்கியா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் கடைசியில் கணவரின் திருமணத்திற்கு மனைவியே பூ தூவி வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார் போல,பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கிடைத்தது தான் சந்தோஷம். தன்னுடைய கணவர் விட்டுப் போனதை விடவும் தான் சமையல் ஆர்டரால ஜெயித்து விட்டோம் என்று தான் மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications