Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலா சென்ற இடத்தில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு.. வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் கதாநாயகன் சித்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருக்கு உடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி மனைவியோடு சித்து சுற்றுலா சென்று இருக்கிறார்.

சித்துவும் அவருடைய மனைவியான ஸ்ரேயாவும் போட்டி போட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

 ரசிகர்களை கவர்ந்த ஜோடி

ரசிகர்களை கவர்ந்த ஜோடி

சீரியலில் மூலமாக பல நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகின்றனர். வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் தற்போது தொடங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒரு சீரியலில் நடித்து முடித்து வேறு சீரியலில் தொடர்ந்து நடித்தாலும் கூட தங்களுக்கு பிடித்த அதே பெயரைக் கூறி தான் ரசிகர்கள் அவர்களை அழைத்து வருகின்றனர். இதில் திருமணம் சீரியலில் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து அடங்குவார்கள்.

தனித்தனி சீரியல்களில் பிஸி

தனித்தனி சீரியல்களில் பிஸி

ஆரம்பத்தில் தமிழ் தெரியாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு சித்து தான் தமிழ் பேச கற்றுக் கொடுத்திருக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து மீண்டும் இவர்கள் ஒன்றாக சீரியலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரேயா திருமணம் சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

திடீர் சுற்றுலா

திடீர் சுற்றுலா

இருவரும் தனித்தனி சீரியல்களில் பிஸியாக இருப்பதால் தற்போது ஒன்றாக சுற்றுலா சென்று இருக்கின்றனர். அதுவும் சித்துவின் பிறந்தநாள் இந்த வாரத்தில் வருவதால் சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகளை பார்த்த ரசிகர்கள் சிலர் லேசாக பொறாமை பட்டாலும், லைக் மட்டும் அளித்து வருகிறார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் போட்டி போட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

சந்தோஷமான பதிவு

சந்தோஷமான பதிவு

தன்னுடைய காதல் மனைவியான ஸ்ரேயாவை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்து வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு தான் தற்போது ரசிகர்களை கவர்ந்து உள்ளதாம். ஸ்ரேயா மற்றும் சித்து இருவரும் இருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த சித்து அதற்கு," நீங்கள் என் பதில் பிரார்த்தனை, என் நிறைவேறிய ஆசை, என் நனவான கனவு என்றும், நீங்கள் என் பிரார்த்தனைக்கு கிடைத்த பலன், என்னுடைய நிறைவேறிய ஆசை. அது மட்டும் அல்லாமல் என் நினைவான கனவும் நீங்கள் தான் என்று ஸ்ரேயாவை டேக் செய்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் சுற்றுலா முடிந்து திரும்ப வரும் போது நல்ல செய்தியோடு தான் வருவார்கள் போல என்று கிண்டல் செய்தாலும் வாழ்த்துக்களை அனுப்ப மறக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+