மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த பாண்டியன் ஸ்டோர்...வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: இன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நெடும் தொடராக இது ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் இப்போது சீரியலில் இல்லை. இது ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டாப் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒன்றாக இருந்து வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்களை முடிவடைந்து நான்காவது வருடத்தில் அடி எடுத்து வைத்தாலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பல குடும்பங்களில் இந்த மாதிரி குடும்ப ஒற்றுமை இருப்பது இல்லை. என்பதாலோ, என்னவோ பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். நாளுக்கு நாள் சீரியல் ரசிகர்கள் அதிகரித்தாலும் ஆரம்பத்தில் இருந்த பல நடிகர்கள் இந்த சீரியலில் தற்போது இல்லை என்பது பலருக்கும் வேதனையாகத்தான் இருக்கின்றது.

அண்ணன் தம்பிகளின் பாசம்
டி ஆர் பி யில் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது தனது கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலில் தனம் கேரக்டரில் சுஜிதா நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்தான் இந்த சீரியலின் மூத்த அண்ணியாக இருந்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சத்தியமூர்த்தி கேரக்டரில் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார். மூத்த தம்பியாக ஜீவா கேரக்டரில் வெங்கட் ரங்கநாதன், அவருக்கு மனைவியாக மீனா கேரக்டரில் ராஜ்குமார், அடுத்த தம்பியாக கதிரவன் கேரக்டரில் குமரன் தங்கராஜன், அவருக்கு ஜோடியாக முல்லை கேரக்டரில் ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகு காவியா அறிவுமணி நடித்து வருகிறார். கடைக்குட்டி தம்பியாக கண்ணன் கேரக்டரில் சரவணன் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கேரக்டரில் ஆரம்பத்தில் வைசாலி தணிகா நடித்து வந்தார். அதற்கடுத்ததாக விஜே தீபிகா லட்சுமண பாண்டி நடித்து வந்தார். தற்போது அவரும் மாறி சாய் காயத்ரி அவருக்கு பதிலாக நடித்துவருகிறார்.
Recommended Video

டி ஆர் பி யில் முதலிடம்
குடும்பத்தில் இவர்களுக்கு அம்மாவாக லட்சுமி கேரக்டரில் ஷீலா நடித்து வந்தார். இவர் தற்போது இறந்து விட்டதாக கதை அமைந்திருப்பதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகி இருக்கிறார். அவருடைய இறப்பு குடும்பத்திலுள்ளவர்களை மட்டுமில்லாமல் சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. என்னதான் இது கதைக்காக நடந்ததாக இருந்தாலும் அவருடைய இறப்பு மற்றும் இறுதி சடங்கு காரியங்களை தத்துரூபமாக எடுத்து இருந்ததால் இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்கு முன்பு மீனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி,
மீனாவின் குழந்தையின் பெயர் வைப்பு பங்க்ஷன், தனத்தின் வளைகாப்பு பங்க்ஷன் என தொடர்ச்சியாக சந்தோஷமான நிகழ்ச்சிகளை காட்டி டிஆர்பியை உயர்த்திக் கொண்டிருந்தனர்.

நான்காவது ஆண்டு தொடக்கம்
இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பலர் மாறிவிட்டனர். விஜேசித்ராவின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இவர்தான் முல்லை கேரக்டரில் தத்ரூபமாக ரசிகர்களின் மனதில் பதிந்து இருந்தவர். ஆனால் இவர் திடீரென்று இறந்ததும் அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாமல் ரசிகர்கள் பலர் தவித்து வந்தனர். அவருக்குப் பிறகு குமரேசன் ஆக நடித்து வந்த நெல்லை சிவாவும் திடீரென்று உடல்நிலை குறைபாட்டினால் இறந்து விட்டார். இவர் இந்த வீட்டில் ஒரு தந்தையை போல அனைவருக்கும் இருந்து வந்ததும், இவருடைய அழகான தமிழ் பேச்சும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இவருடைய மறைவும் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பல மாற்றங்கள் நடைபெற்று இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விறுவிறுப்பு குறையாமல் தான் இருந்து வருகிறது. அதனாலேயே மூன்று வருடங்களை நிறைவு அடைந்தாலும் நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சீரியலுக்கும், சீரியல் நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications