அவமானப்பட்டாலும் அலட்டிக்கொள்ளாத அபிஷேக்... வேற லெவல் தலைவா...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று அப்போ கவுண்டமணி சொன்னதை இப்போ அபிஷேக் நிரூபித்து வருகிறார்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதுபோல இவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறது.
அபிஷேக் ராஜா என்பது அவருடைய பெயர் ஆனால் கண்டெண்ட்களில் ராஜா என்பது ரசிகர்கள் அவருக்கு வைத்த பெயராக வலம் வருகிறது.

தீவிரமான முயற்சிதான்
தான் வெற்றி பெற வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவேன் என்று சிலர் சொல்வார்கள் அதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக் ராஜா. இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் இவர் உருண்டு உருண்டு பார்த்தாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்பதுபோல இவர் செய்யும் செயல்கள் எல்லாம் பாதி பலிக்காமலேயே போய்விடுகிறது. ஆனால் அதைப்பார்த்து ரசிகர்கள் நன்றாக கலாய்த்து வருகின்றனர்.

ஒரே காமெடி தான்
போன வாரம் எலிமினேஷனில் கடைசி வரைக்கும் இருக்க வைத்துவிட்ட ரசிகர்களை, இந்த வாரம் நம்பாமல் எப்படியும் காயினை ஜெயித்து எலிமினேஷனில் இருந்து தப்பி விட வேண்டும் என்று இவர் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் வில்லத்தனமான பல வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் கடைசியில் அனைத்துமே காமெடியாக முடிந்துவிடுகிறது. இவர் செய்யும் செயல்களைப் பார்த்து திட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள் கூட தற்போது இவரை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

வேற லெவல் தான்
நேற்றைய எபிசோட்டில் இவர் அந்தப்பக்கம் ஒரு பேச்சு இந்தப்பக்கம் ஒரு பேச்சு என உருட்டுன உருட்டு எல்லாம் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள். அடடா இப்படி ஒரு கேரக்டர் உண்டா என்று பலர் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனராம். அந்த அளவிற்கு தான் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களிடம் பாடாய் பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் ஒன்றும் எடுபடாமல் போய்விட்டது. ஆனாலும் அதையும் கண்டு கொள்ளாமல் கேஷுவலாக கடந்து போன இவரைப் பார்த்து நெட்டிசன்கள் தங்களுடைய மீம்ஸ்களில் தெறிக்க விட்டு வருகின்றனர். வடிவேலுவின் படத்தில் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் என்று சொல்வது போலத்தான் இவர் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒன்றும் முடியலையே
இவரை இவ்வளவு நாளாக பல நெகடிவ்வர்ஸ் திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இவருக்கும் பல ரசிகர்கள் உருவாகத் தொடங்கிவிட்டனர். அவர்கள் நேற்றைய எபிசோட்டில் இவர் சுருதியிடம் அவமானப்பட்டாலும் அதை சட்டை பண்ணாமல் தட்டிக்கொண்டு இவர் சென்றதைப் பார்த்து இவருக்கு எங்க தல தில்ல பாத்தியா?? என்று ஒரு சிலரும் எங்க தலைவர் வேறு ரகம் என்று பலர் இவரை பாராட்டி வருகின்றனர். ஒருவழியாக நெகட்டிவ் கமெண்டுகளை அதிகமாக பெற்றுக்கொண்டிருந்த அபிஷேக் ராஜா இப்போது பலருடைய சிரிப்புக்கும் காரணமாக இருந்து வருகிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications