க்யூட்டான ஷபானாவின் போட்டோவை வெயிட்டாக வைரலாக்கும் ரசிகர்கள்...காரணம் இதுதானா?
சென்னை: தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரசிகர்களால் ஷபானாவின் போட்டோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு எந்தப்பக்கம் பார்த்தாலும் ஷபானாவின் திருமண போட்டோக்களாகத்தான் இருக்கிறது.
ரசிகர்களின் அன்பை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷபானா. முதல் சீரியலில் இவருடைய க்யூட்டான நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியலின் மூலமாக பலர் இவரை பார்வதி என்றுதான் அழைத்து வருகின்றனர். இவருடைய சீரியல் கேரக்டருக்கும் நிஜத்தில் இவருடைய கேரக்டருக்கும் அதிகமாகவே வித்தியாசம் இருந்து வருகிறதாம்.

குழந்தை மனம் மாறாத ஷபானா
செம்பருத்தி சீரியலில் அடக்கமான மருமகளாகவும், அன்பான மனைவியாகவும், குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு பெண்ணாகவும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் குழந்தை மனம் மாறாத ஒரு குறும்புக்கார பெண்ணாக தான் இருந்து வருகிறார் என்று இவருடைய தோழிகள் அடிக்கடி பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கின்றனர். எப்போதுமே ஜாலியாக இருக்கும் இவரிடம் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி தான்
ரசிகர்களின் ஆசைப்படியே இவர் சீக்கிரத்தில் திருமணம் இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர் காதலிக்கும் விஷயம் சமூக வலை தளத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் ஆரியனை காதலிப்பதை அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருந்தனர். ரகசியமாக இவர்களிருவரும் மோதிரம் மாற்றி எங்கேஜிமெண்ட் செய்துவிட்டார்கள் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

குறையாத ரசிகர்களின் அன்பு
திடீரென்று ஷபானாவின் திருமண செய்தியை கேள்விப்பட்டதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய நெருங்கிய தோழிகள் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் இவருடைய திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு இவருடைய போட்டோக்கள் சமூக வலைத்தளம் எங்கும் பரவி வருகிறது. இதை பார்க்கும்போது ரசிகர்களின் அன்பு இவர் மீது எவ்வளவு இருக்கிறது என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு திருமணம் முடிந்து பல நாட்கள் ஆனாலும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications