Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நடிகையை தான் கல்யாணம் பண்ண ஆசை பட்டேன்...மனம் திறந்த ராஜூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது ஐந்து வயதிலிருந்தே அந்த நடிகையின் மீது தான் நான் காதல் கொண்டேன் என்று மனம் திறந்திருக்கிறார் ராஜு.

ஒரு சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய ஜாலியான கேரக்டரால் நிகழ்ச்சியை கலகலப்பூட்டுகிறார் பிரியங்கா.

ராஜுவின் காதல் கதையை கேட்டு பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

ஜாலியான போட்டியாளர்கள்

ஜாலியான போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பக்கம் அழுகை சீன்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில போட்டியாளர்கள் சுவாரஸ்யத்தை கூட்டி கொண்டிருக்கின்றனர். அதில் பிரியங்கா, அண்ணாச்சி மற்றும் ராஜு போன்றோர் இடம்பிடித்து விடுகிறார்கள். இவர்கள் செய்யும் ஒரு சில குறும்புகள் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை பார்க்க தூண்டி விறுவிறுப்பை கூட்டுகிறது. இவர்களுக்காகவே ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.

மதுமிதாவின் சேட்டை

மதுமிதாவின் சேட்டை

இன்றைய ப்ரமோக்கள் அனைத்திலும் அழுகைகளும், சண்டைகளும் அதிகமாக இடம்பெற்று இருந்த நேரத்தில், அன்சீனில் ராஜு மற்றும் பிரியங்காவின் கலக்கலான காமெடி கள் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் நாங்கள் இனி எபிசோடு கூட பார்க்கவில்லை, அன்சீனை பார்த்துக் கொள்கிறோம் என கூறிவருகின்றனர். காரணம் அன்சீனில் விருவிருப்பான மற்றும் காமெடியான சீன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய அன்சீனில் மதுமிதாவின் காமெடிகளும் சேட்டைகளும் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இன்று ராஜு அதனை தொடங்கி இருக்கிறார்.

காதல் நினைவுகள்

காதல் நினைவுகள்

இந்த வாரம் போட்டியாளர்கள் பட்டிக்காடா?? பட்டணமா?? என்று இரண்டு அணிகளாகப் பிரிந்து டாஸ்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பிரியங்கா தனக்கே உரிய குறும்பு தனத்தோடு அனைவரிடமும் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார். சின்னவயதில் இந்த துறையில் சார்ந்தவர்களை யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதில் ஆசை இருக்குமே, அப்படி நீங்கள் யாரை நினைத்தீர்கள் என்று இவர் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதில் பலரும் தங்களுடைய மலரும் காதல் நினைவுகளை கூறிவருகின்றனர்.

ராஜுவின் காதல்

ராஜுவின் காதல்

அதே கேள்வியை பிரியங்கா ராஜுவிடம் கேட்டதற்கு ராஜு, யாரை மாதிரியும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஐந்து வயதில் இருந்து நடிகை ரம்பாவை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் என்று சொல்ல, அதற்கு சுற்றியிருந்த போட்டியாளர்கள் அனைவரும் கலாய்த்து சிரித்து வருகின்றனர். சும்மாவே ஆடும் பிரியங்கா இவருடைய இந்த பதிலைக் கேட்டதும் துள்ளி குதித்து ஜாலி பண்ணி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ராஜுவின் ஆசை அவருடைய மனைவிக்கு தெரியுமா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+