Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குணசேகரனின் அடுத்த ஆயுதம் தம்பி பாசம்... பரிதவிக்கும் ஜனனி.. இனி தான் மாறப்போகும் ஆட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியிடம் இருந்து சக்தியை பிரிப்பதற்காக குணசேகரன் எடுத்திருக்கும் முடிவால் மாறப்போகிறது கதைக்களம்.

தன்னுடைய அடுத்த ஆயுதமாக குணசேகரன் தம்பி பாசத்தை கையில் எடுத்திருக்கிறார்.

அண்ணன் பேச்சைக் கேட்டு நடக்கும் தம்பிகளால் வீட்டில் கலவரம் ஏற்பட போகிறது.

குணசேகரனின் சபதம்

குணசேகரனின் சபதம்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஜனனியிடம் சபதம் போட்டிருக்கிறார். தன்னுடைய தம்பியான சக்தியை உன்னிடமிருந்து பிரித்து பழைய நிலைக்கு அவனை மீண்டும் மாற்றி விடுவேன் என்று, ஆனால் சக்தி ஜனனி சக்தி இனி அப்படி இருக்க மாட்டார் என்று ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தார்.ஆனால் குணசேகரன் ஜெயிலுக்கு சென்றதற்கு காரணம் ஜனனி தான் என்று கோபத்தில் சக்தி மீண்டும் அண்ணன் பாசத்திற்கு அடிமையாக மாறி இருக்கிறார்.

பீல் பண்ண வைத்த பாச மழை

பீல் பண்ண வைத்த பாச மழை

ஜெயிலுக்கு சென்று வந்த குணசேகரன் இனி நான் வீட்டிற்கு வர மாட்டேன் என்று பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கே வந்த தம்பிகளுக்கு தன் கையாலே உணவு சமைத்து, உணவு ஊட்டி ஆரம்ப காலகட்டத்தில் சின்ன வயசுல நான் உங்களுக்கு இப்படித்தான் சோறு ஊட்டி இருக்கேன் என்று சென்டிமென்ட் பாச மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த சீனுக்கு அவர் முத்துக்கு முத்தாக எனும் பாடலை வேற பக்கத்தில் ஒலிக்க வைத்து பார்ப்பவர்களையும் கண்கலங்க செய்து விட்டார். என்னதான் இவர் வில்லனாக இருந்தாலும் தம்பிகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் அழுதே விட்டார்களாம்.

சக்தியின் மனநிலை மாற்றம்

சக்தியின் மனநிலை மாற்றம்

தம்பிகளுக்கு தன் கையாலே சாப்பாடு ஊட்டி முடித்ததும் தன்னுடைய சொத்துகளில் அவர்களின் பங்கிற்கான வருமானத்தை பிரித்து கொடுப்பதற்காக ஆடிட்டரை வரச் சொல்லி இருக்கிறார். அதற்கு தம்பிகளிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்தும் வாங்கி விட்டார். தன்னுடைய பாசத்தை காட்டி தம்பிகளிடம் இவர் செய்யும் செயல்களால் தம்பிகள் அனைவரும் மனைவிகள் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். அதுவும் சக்தியை சொல்லவே வேண்டாம் ஜனனி மீது கொலைவெறியில் இருக்கிறார். தன்னுடைய அண்ணன் ஜெயிலுக்கு சென்றதற்கு முழுக்க ஜனனி மட்டும் தான் காரணம் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். குணசேகரனும் மற்ற அண்ணன்களும் அதற்கு அடிக்கடி தூபம் போட்டு கொண்டிருக்கிறார்.

வேதாளம் முருங்க மரம் ஏறிடிச்சி

வேதாளம் முருங்க மரம் ஏறிடிச்சி

ஜனனி வீட்டை விட்டு சென்றது மட்டும்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் வேலைக்கு இன்டர்வியூக்கு சென்றது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் தற்போது வீட்டிற்கு வந்த சக்தி ஜனனியிடம் நீ யாரை கேட்டு வேலைக்கு சென்று விட்டு வந்திருக்கிறாய் என்று கத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களாக ஜனனியிடம் பேசாமல் இருந்த சக்தி இன்று மீண்டும் அந்நியனாக மாறி இருக்கிறார். ஜனனி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்ற எடுக்கப் போகும் முடிவுதான் இந்த வாரம் எபிசோடாக இருக்கப் போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+