இசைவாணி இல்லாத பிக்பாஸ் பார்க்க மாட்டோம்..ரசிகர்களின் கருத்து..இசைவாணியின் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் இல்லாத பிக்பாஸில் பார்க்க மாட்டோம் என்று கூறிய ரசிகர்களுக்கு இசைவாணி அறிவுரை கூறியுள்ளார்.

இசை வாணியின் அறிவுரையை கேட்டதும் ரசிகர்கள் ஒரு சிலர் கலாய்த்து வருகின்றனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிக்பாஸில் அறிமுகம்

பிக்பாஸில் அறிமுகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒரு சிலர் புகழின் உச்சிக்கு சென்று விடுவர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடுகின்றனர். இதற்காகவே பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகின்றனர். அதில் ஒருவர்தான் இசை வாணியும். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறார்.

கானா பாடகி

கானா பாடகி

நடுத்தர குடும்பத்தில் பிறந்து கானா பாடலால் பலருக்கும் பரிச்சயமான இசைவாணி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து வருகிறார். இவர் ஒரு சில கானா பாடல்களை பாடி அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நேரத்தில் இவருடைய பிக்பாஸ் அவதாரம் பெரிய அளவில் இவருக்கு அடுத்த கட்டத்தில் கொண்டு செல்ல வழிவகுக்கும் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்த கேரக்டரை விடவும் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய கேரக்டரை காட்டத் தொடங்கினார். ஆனால் ஓட்டுகள் குறைந்த காரணத்தினால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒத்துழைப்பு கொடுக்காத போட்டியாளர்கள்

ஒத்துழைப்பு கொடுக்காத போட்டியாளர்கள்

50 நாட்கள் வரை தொடர்ந்து இந்த வீட்டில் இவர் இருந்த நிலையில் இரண்டு முறை இவர் தலைவர் பதவியிலும் இருந்திருக்கிறார். ஆனால் அதில் சிறப்பாக செயல்படவில்லை என்று ரசிகர்கள் பலர் குறைகூறி கொண்டிருப்பதற்கு போட்டியாளர்கள் இவருக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்காதது ஒரு காரணம் என்று இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் செய்யும் செயல்களுக்கு ஒரு சில போட்டியாளர்கள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு இவரை மட்டம் தட்டி கொண்டிருந்ததால் தான் இவருடைய விளையாட்டை விளையாட முடியவில்லை என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். அதையேதான் இசையும் கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து, இசை வாணியின் அட்வைஸ்

ரசிகர்களின் கருத்து, இசை வாணியின் அட்வைஸ்

இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது, இவருக்கு இது நாள் வரைக்கும் ஓட்டு போட்டு ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களின் மத்தியில் சிறு ஏமாற்றமாக தான் இருந்து வந்தது. அதனால் ஒரு சில ரசிகர்கள் இவரிடம் நீங்க இல்லாத பிக்பாஸ் இனி பார்க்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்களாம். அவர்களுக்கு இசைவாணி அறிவுரை கூறியிருக்கிறார். அப்படி எல்லாம் பார்க்காமல் இருக்காதீர்கள். தொடர்ந்து பாருங்கள் அப்போதுதான் அங்கே என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பார்த்து உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று அட்வைஸ் அள்ளித் தெளித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+