கோபியை கல்யாணம் செய்தது தப்பு, விரக்தியில் ராதிகா எடுத்த முடிவு.. எதிர்பார்க்காத சீரியல் முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் காதல் திருமணம் செய்து கொண்ட கோபியின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கி இருக்கிறது. அடுத்தடுத்த பிரச்சனைகளால் ராதிகா கோபியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
எழில் உடைய திருமணத்தால் இனி பாக்யாவின் வீட்டில் பல கலவரங்கள் ஏற்பட இருக்கிறது .வர்ஷினி செய்த தில்லாலங்கடி வேலையால் இனி எழிலுடைய பாடு திண்டாட்டம் தான்.
இதுவரைக்கும் ராதிகா தான் இந்த சீரியலின் வில்லி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வர்ஷினியின் வில்லத்தனம் இன்று எதிர்பார்க்காததாக அமைந்திருக்கிறது.

இனியாவால் கோபிக்கு வந்த வினை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கோபி மயூவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் .ஸ்கூலில் என்ன நடந்தது ஏன் இப்படி இருக்கிறார் என்று மயூவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க ராதிகா நீங்க இப்படி நடந்து கொள்வது எனக்கு பிடிக்கல. இதுதான் மையூ ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று கூறுகிறார். என்ன ஆச்சு என கோபி கேட்க ஸ்கூலில் இனியா மையுடன் நடந்து கொண்டதை பற்றி கூறுகிறார். மயூவை இனியா கீழே தள்ளிவிட்டார் என்று சொன்னதற்கு கோபி இனியா அப்படி செய்ய மாட்டாளே என்று சொன்னதும் ராதிகா அதிர்ச்சி அடைந்து அப்போ மயூ பொய் சொல்கிறாளா? என்று சொன்னதற்கு கோபி இனியா ஒரு குழந்தை என்று சொல்கிறார்கள். இனியா குழந்தை இல்லை மயூ தான் குழந்தை என்று ராதிகா கோபப்படுகிறார்.

நிம்மதி இல்லாமல் தவிக்கும் கோபி
உங்களை கல்யாணம் செய்து இருக்கவே கூடாது .கல்யாணம் செய்து நல்லா வாழ வேண்டும் என்று நினைத்ததற்கு தினமும் ஒவ்வொருவரிடமாக நானும் என்னுடைய குழந்தையும் அவமானம் தான் படுகிறோம் என்று கோபத்தோடு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறார் .எனக்கு கல்யாண வாழ்க்கையில் நிம்மதியே இல்லை, அரேஞ்ச் மேரேஜ் செய்தும் நிம்மதி இல்லை, லவ் மேரேஜ் செய்தும் நிம்மதி இல்லை .அப்போ எப்படித்தான் கல்யாண வாழ்க்கைக்கு நிம்மதியாக இருப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பாக்கியாவின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்போது செழியன் ஜெனியை அன்போடு சாப்பிட சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வர்ஷினி வந்ததை பற்றி எழிலிடம் ஈஸ்வரி கூறுகிறார்.

எழிலுக்கு கிடைத்த அதிர்ச்சி
எழில் வர்ஷினி வந்ததை என்னிடம் சொல்லவில்லை என்று சொன்னதற்கு, வர்ஷினி தான் ரொம்ப நல்ல பொண்ணு ஆனால் உன்னுடைய பிரண்ட் என்று ஒரு பொண்ணு வருமே அந்த அமிர்தா அது நல்லவன் மாதிரி வேஷம் போட்டு நடிச்சுக்கிட்டு இருக்கு, ஆனா வர்ஷினி குழந்தைத்தனமாக வெகுளியாக இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வர்ஷினி அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தாவின் பெற்றோரிடத்தில் ஆரம்பத்தில் நல்லபடியாக பேசிவிட்டு பின்பு தான் எழிலை காதலிப்பதையும் இரு வீட்டிலும் எங்களுடைய காதலுக்கு சம்மதம் சொல்லி விடுவார்கள், நான் எங்க அப்பாவிடம் கூட சொல்லி விட்டேன். அவர் ஓகே சொல்லிவிட்டார். எழிலுடைய வீட்டிலும் என்னை ரொம்பவே பிடித்து விட்டது. அதனால் அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டார்கள். இனி மாப்பிள்ளையை பார்ப்பது மட்டும்தான் வேலை. என்னுடைய திருமணத்திற்கு பக்கத்திலேயே நின்னு அமிர்தா தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

வர்ஷினியால் அதிர்ச்சியில் அமிர்தா
எழில் அப்படி பட்டவர் இல்லை என்று அமிர்தா சொல்வதை அமிர்தாவின் அப்பாவும் அம்மாவும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் .இதைப்பற்றி நீ பேசாதே என்று கிளம்பி விடுகின்றனர். அமிர்தா சோகத்தோடு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது .கோபியின் மீது கோபத்தில் இருக்கும் ராதிகா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது நாளைய எபிசோட்டில் தெரிய போகிறது.












Click it and Unblock the Notifications