ராதிகா திட்டியதால் வீட்டுக்கு போன கோபி..பாக்கியா கொடுத்த பஞ்ச்.. இவ்வளவு சீக்கிரமாக எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் வற்புறுத்தலின் காரணமாக பாக்யாவின் வீட்டிற்கு மீண்டும் கோபி சென்று இருக்கிறார்.
ரேஷன் கார்டு வேண்டும் என்று கேட்டு குடும்பத்தினரிடம் சண்டை போட்ட கோபிக்கு குடும்பத்தினர் சரியான பாடம் புகட்டி அனுப்பி இருக்கின்றனர்.

அமிர்தாவின் ஆறுதல்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில் ஹோட்டலுக்கு போன பாக்கியா இனியாவிடம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்து வேண்டும் என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார் . இனியா உடன்படிக்கும் மாணவனை குறித்து எடுத்துக்காட்டு கூறி பாக்கியா பேசியதை கேட்டு இனியா மனம் மாறி அம்மா நீ இவ்ளோ பேசுவாய் என்று எனக்கு இப்போது தான் தெரிகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஆபீஸில் எழில் அமிர்தாவிடம் அப்பா அம்மாவுக்கு ஏன் என் மேல நம்பிக்கை போயிடுச்சி, எங்க அப்பா செய்ததாலயா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா இல்லை கொஞ்சம் பயப்படுகிறார்கள் அதுதான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

வர்ஷினியின் புது ப்ளான்
எங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினையில் இப்போதைக்கு யாரிடமும் நம்முடைய திருமணத்தைப் பற்றி பேச முடியாது. அதனால் கொஞ்சம் டைம் வேண்டும் என்று அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு எழில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வர்ஷினி வந்து இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து கோபப்பட்டு கதவை சாத்திக்கொண்டு சென்று விடுகிறார். அடுத்ததாக பூ ,பழம், புடவை எல்லாம் வாங்கிக் கொண்டு எழில் வீட்டிற்கு தர்ஷினி வருகிறார். அங்கே தாத்தா பாட்டி ஹாலில் அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .முதலில் யார் என்று தெரியாமல் இருந்த குடும்பத்தினருக்கு தான் எழிலின் ப்ரொடியூசர் மகள் என்று தன்னை அறிமுகப்படுத்தி அனைவருடமும் ஆசீர்வாதம் வாங்கி அவர்களுடைய மனதில் இடம் பிடிப்பது போல பேசிக் கொண்டு கிளம்புகிறார்.

கோபியை உசுப்பேத்திய ராதிகா
அடுத்து ராதிகா போனில் பேசி கொண்டு இருக்கிறார் .கொரியர் பாய் பழைய வீட்டு அட்ரஸ் க்கு வந்த லெட்டரை வந்து பெற்றுக் கொள்ளவும் இல்லை என்றால் நானா பேங்குக்கு திருப்பி அனுப்பி விடுவேன் என்று கூறுகிறார். ராதிகா அந்த லெட்டரை உங்கள் ஆபீஸில் வைத்துக் கொள்ளுங்கள் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு போஸ்ட்மேன் முடியாது என்று சொன்னதும் கோபத்தில் கோபியிடம் உங்களால் தான் வீட்டு அட்ரஸை மாற்ற வேண்டும் இன்னும் ஏன் எதுவும் பண்ணாம இருக்கீங்க என்று சத்தம் போடுகிறார். நீங்க ரொம்ப பயந்தான் கொலியாக இருக்கீங்க உங்களால் ஒண்ணுமே செய்ய முடியாது என்று கோபியை திட்டி உசுப்பேத்தியதால் கோபி நேராக வீட்டுக்கு சென்று ரேஷன் கார்டை வாங்கிவிடலாம் என்று கோபமாக கிளம்புகிறார்.

மரியாதை முக்கியம் கோபி
வீட்டில் செழியன் இனியா என எல்லாரும் இருப்பதை பார்த்து முதலில் பம்மிய கோபி பிறகு பாக்யாவிடம் கேட்டது கொடுக்க மாட்டியா? என சத்தம் போட தாத்தா அப்படி என்ன கேட்டா ?என்னத்த கொடுக்கணும்? என கேள்வி கேட்க ,அத உங்க மருமக கிட்ட கேளுங்க என கூறுகிறார். பிறகு பாக்யாவிடம் எழில் என்ன கேட்டார் என்று கேட்க அதை அவரிடமே கேளு என்று பாக்கியா கூறுகிறார் .பிறகு ரேஷன் கார்டு வேண்டும் என்றும் பெயர் நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னதும் தாத்தா தர முடியாது என்று கூறுகிறார். அடுத்து கோபி பாக்கியாவிடம் பாக்யா போய் எடுத்துட்டு வா என அதிகாரத்தோடு சொல்கிறார் .இதனால் கடுப்பான பாக்கியா வா போ னு சொல்ல நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது. மரியாதை ரொம்ப முக்கியம் என ஷாக் கொடுக்கிறார். இதை கேட்ட கோபி அதிர்ச்சியில் அப்படியே நிற்கிறார். இதோடு இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications