பிக் பாஸ் விட்டு வருவதற்கு குடும்பம் மட்டும் காரணம் இல்லை..வேறு காரணமும்..உண்மையை உளறிய ஜி.பி முத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து திடீரென அதன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.
இதுவரைக்கும் ஜி பி முத்து தன்னுடைய மகனின் நினைவினால் நிகழ்ச்சி விட்டு வெளியேறி இருந்ததாக கூறிய நிலையில் தற்போது வேறு ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார்.
ஜிபி முத்துவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வாரா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டு வரும் நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது அந்த நிகழ்ச்சியை பார்ப்பாரா இல்லையா என்பது பற்றி பலர் கருத்து கேட்க ஜிபி முத்து அதிகமாக பார்ப்பதே இல்லையாம்.

பல்வேறு வகையான போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் இருந்து போட்டியாளர்கள் இந்த சீசனில் அறிமுகமாகி இருந்தனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் முறையாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் பிரதிநிதியாகவும் இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் கடத்த சீசனிலே அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து இந்த சீசனில் ஒரு போட்டியாளர்களாக வந்ததும் ரசிகர்கள் ஆரம்பத்திலே இவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வந்தனர்.

ஜி பி முத்துவின் வெளியேற்றம்
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிபி முத்து இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார். தன்னுடைய குழந்தையின் ஞாபகமாக இருப்பதாகவும் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் வெளியே சென்று ஆக வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்த ஜிபி முத்து ஒரு விதமாக மன அழுத்தத்தில் இருந்தது மாதிரியே இருந்து வந்தார். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கமலும் ஜிபி முத்துவோடு பேசி பார்த்தார். ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேட்பது போல இல்லை அதனால் ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் வெளியேறி இருந்தார்.

அழைப்பு வரவில்லை
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைத் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதை குறித்து பலரும் அவரிடம் கருத்து கேட்கிறார்களாம். ஆனால் தனக்கு இதுவரைக்கும் பிக்பாஸில் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அப்படி வந்தால் தான் போவேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தான் ரொம்பவே ஃபீல் பண்ணிடாதாகவும் கூறியிருக்கிறார். வெளியே செல்லும் இடத்தில் அதிகமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஏன் வந்தீர்கள் என்று கேள்வி கேட்பதாகவும் கவலைப்பட்டிருக்கிறார்.

இதுதான் பிரச்சனை
இதுவரைக்கும் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வந்தது குடும்ப நினைவாக இருந்ததாகவும் குறிப்பாக அவருடைய மகனின் நினைவாக இருந்ததாகவோ கூறி வந்தார் ஆனால் இப்போது தனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, காய்ச்சல் உள்ளே இருந்தது, எனக்கு குளுக்கோஸ் போடும் நிலைமையில் தான் நான் இருந்தேன். சிலர் நான் வீட்டை விட்டு வெளியே வருவதற்காக சாப்பிடாமல் நடித்துக் கொண்டிருந்ததாக கூறினார்கள். ஆனால் நான் உண்மையிலேயே அங்க உடல்நிலை சரியில்லாமல் மனசும் சரியில்லாமல் சாப்பாடு ஏற்றுக்கொள்ளாமல் தான் இருந்தேன். அதனால் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தேன். குடும்பமா? நிகழ்ச்சியா? என்று கேட்டால் நான் எப்போதும் குடும்பத்தை தான் சொல்லுவேன். இப்போது ஏழு வயது குழந்தைகள் கூட என்னிடம் உங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தேன் மாமா என்று சொல்வதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications