செம அழகில், செம ஸ்டைலில் திரும்பிவந்த அர்ச்சனா.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை: வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று வீர முழக்கம் முழங்கிய படி அர்ச்சனா கம்பேக் கொடுத்து இருப்பது அவருடைய ரசிகர்களின் மத்தியில் செம ஜாலி தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இவருடைய சந்தோஷமான முகத்தை பார்த்த ரசிகர்களுக்கு சந்தோஷம் தானாகவே ஒட்டிக்கொண்டு விட்டதாம்.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு முதல் முறையாக இவர் கேமரா முன்னாடி வந்ததும், பழைய நிலையில் இவரை பார்த்த அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.

பிரபலமான தொகுப்பாளர்
எத்தனையோ வருடங்களாக தொகுப்பாளராக விஜே அர்ச்சனா பணியாற்றிக் கொண்டிருந்தாலும், ரசிகர்களின் மனதில் என்றுமே இவருக்கு தனி இடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொகுப்பாளர்கள் புதுசு புதுசாக பலபேர் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் இவருடைய பெயரை சொன்னதும் டக்கென்று அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும், அவ்வளவு பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை என்று சொன்னதும் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்துவிட்டார்கள். இவர் நலம் பெற்று வரவேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது நல்லபடியாக உடல்நிலை சரி ஆகிவிட்டார்.

தலையில் ஆப்ரேஷன்
இவருக்கு உடல்நிலை சரியானதும் எப்போது மீண்டும் தொகுப்பாளராக வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவரும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் இப்போதெல்லாம் என்னால் வந்து வேலையை செய்ய முடியாது. தொகுப்பாளராக வேலை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது எட்டு மணி நேரங்கள் வரைக்கும் நின்று கொண்டே இருக்க வேண்டும். ஏற்கனவே என்னுடைய கால் தொடையில் 16 தையல் போட்டிருப்பதால் அதிக நேரம் நின்று கொண்டிருக்க முடியாது..இந்த நிலையில் என்னால் சமாளிக்க முடியாது அதனால் உடல் நிலை நன்றாக சரியான பிறகு தான் வருவேன் என்று கூறியிருந்தார். இதனை கேட்டு ஷாக் ஆனாலும் சரி ஓகே பொறுமையாக உடல்நிலை சரியானதும் வாருங்கள் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

பதறிப்போன ரசிகர்கள்
தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று ஒரு காமெடி வீடியோவில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ப்ரீவியூ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ அச்சுமாவுக்கு உடம்பு சரி ஆயிடுச்சா? சீக்கிரமா விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னதிரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துவிடுங்கள் என்று ஆர்வத்துடன் கூறிவருகின்றனர். இந்த வீடியோவில் அர்ச்சனாவும் ரோபோ சங்கரும் இணைந்து காமெடியில் மிரட்டி இருக்கிறார்கள்.

மீண்டும் களத்தில் அர்ச்சனா
அர்ச்சனாவின் ரசிகர்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மீது அதிருப்தியில் இருந்து கொண்டிருந்தனர். இவர் இந்த நிகழ்ச்சியில் டாப்பில் வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இவருடைய விளையாட்டு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இதனாலேயே பலர் இவர் மீது காண்டாகி நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இவர் உடல்நிலை சரியில்லாததை பார்த்த போது இவர் மீது அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் இவருடைய படபடவென பேச்சை கேட்டதும் பலருக்கும் கவலைகள் எல்லாம் மறந்து போய்விடும். தன்னுடைய கவலையை மறந்து இவரும் வெளியில் சிரித்த முகமாக படபடக்கும் பட்டாசு போல வெடித்து கொண்டிருப்பதை பார்த்து பலர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications