"நாதஸ்வரம்” நடிகையின் சோகமான மறுபக்கம்.. ஒரே மகனுடைய திடீர் இறப்பு.. இளைஞர்களுக்கு கூறும் அறிவுரை
நாதஸ்வரம் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த ஜெயந்தி தன்னுடைய மகனின் இறப்பிற்கு பிறகு தன்னுடைய நிலைமையை கூறி இளைஞர்களுக்கு அறிவுரை கொடுத்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் கோபியின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயந்தி தன்னுடைய மகனை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
தன்னுடைய மகன் பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போய்விட்டதாக கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆக்சிடென்ட் ஆன நிலையில் மீண்டும் அதே நிலையில் அவருடைய உயிர் பிரிந்து இருக்கிறது என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

சன் டிவி நாதஸ்வரம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல் ஆக இருந்து வருகிறது. இப்போது வரைக்கும் இந்த சீரியலை மிஸ் பண்ணும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த சீரியலில் நடித்த அனைத்து கேரக்டருமே ரசிகர்களின் மனதில் பதிந்த ஒன்று தான் அதிலும் குறிப்பாக கோபி கேரக்டர் யாராலும் மறக்க முடியாது. கோபி கேரக்டரில் இந்த சீரியலின் இயக்குனர் திருமுருகன் நடித்திருப்பார். அவருடைய அம்மாவாக நடித்த நடிகை ஜெயந்தி. அப்போது பல பெண்கள் திட்டி தீர்க்கும் ஒரு நபராகத்தான் இருந்து வந்தார். சீரியலில் இவர் கோபியின் மீது அதிகமாக பாச வைத்திருந்தாலும் பல வருட வருடங்களுக்குப் பிறகு வந்த மூத்த மகன் மீது அதிகமாக பாசத்தை காட்டியதை பார்த்த பல ரசிகர்கள் இவரை திட்டியிருக்கின்றனர்.

ரசிகையின் திட்டு
குறிப்பாக நடிகை ஜெயந்தி சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது ஒரு முறை ஒரு பாட்டி இவரை பார்க்க வந்திருக்கிறார். இவர் யார் என்று கேட்க நாதஸ்வரம் கோபி என் அம்மா என்று சொன்னதும், அந்த பாட்டி இவரை திட்ட தொடங்கி விட்டாராம். உன்னை உன்னுடைய சின்ன மகன் தையல் மெஷின் மிதித்து குடும்பத்தையும் பார்த்து தாங்கி தாங்கி பாய்கிறான். ஆனாலும் நீ 25 வருஷங்களாக எங்கே போனான் என்று தெரியாமல் இருந்த மூத்த மகன் வந்ததும் நீ கோபியை பாடாய்ப் படுத்துறாய் என்று ரொம்பவே திட்டினாராம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலமாக இவர் கேரக்டராகவே மாறியிருந்தார். இந்த நிலையில் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சோகங்கள் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது.

மகனுக்கு ஏற்பட்ட விபத்து
சீரியல் நடிகை ஜெயந்திக்கு இரண்டு மகள்களும், மகனும் இருந்திருக்கிறார். அவருடைய மகன் நாதஸ்வரம் சீரியல் முடிவடைந்ததும் அன்று வீட்டில் கேக் வெட்டி கொண்டாடி இன்னும் மூன்று தலைமுறைக்கு நீங்கள் நடித்துக் கொண்டே இருக்கணும் என்று கூறியிருந்தாராம். அதற்குப் பிறகு இவருக்கு திடீரென ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறது. விபத்தில் அவருடைய காலில் பிளேட் மாட்டப்பட்டிருந்ததாம். பைக்கும் அதிகமாக சேதம் அடைந்திருக்கிறது .அதனால் புது பைக் கூட வாங்கி தர மாட்டோம் நீ வெளியே செல்லும்போதெல்லாம் இந்த பைக்கை பார்த்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று அதைக் கூட சரி செய்யாமல் வீட்டில் தான் வைத்திருந்தார்களாம். அந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இவருடைய நண்பர்களோடு வெளியே சென்று இருக்கிறார்.

தலையில் அடி
அப்போது நடிகை ஜெயந்தியின் மகன் நண்பர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது நண்பரின் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது பைக் ரேஸாகி பாலத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார், பைக் பாலத்திலே விழுந்து விட்டதாகவும் இவர் மட்டும் கீழே விழுந்து தலையில் மட்டும் அடிபட்டு இருந்ததாம். இவர் வீட்டில் இருக்கும் போது திடீரென ஒருவர் வந்து உன்னுடைய மகனுக்கு அடிபட்டிருக்கு என்று சொன்னது போல இருந்ததாம். இவர் திரும்பிப் பார்த்தால் அங்கே யாரும் இல்லையாம். பிறகு அந்த இடத்திற்கு இவர் போய் பார்க்கும் போது இவருடைய மகன் நிஜத்திலும் அடிபட்டு இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய மகன் இறந்த பிறகும் அவருடைய உடல் மட்டும்தான் அழிந்து இருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க அவன் எங்களோடு தான் இருந்து வருகிறார். நான் எப்போதும் வெளியே செல்லும்போது நினைத்துக் கொண்டே தான் சொல்லுவேன். அப்போது திடீரென அவனே மாதிரி யாராவது ஒரு பையன் வந்து எனக்கு உதவுவார் என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இது வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் பலரும் கவனிக்க வேண்டியது என்று கூறி வருகிறார்கள்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications