இங்க வந்து தெரியாம மாட்டிகிட்டேன் கதறும் தாமரை... கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: தன்னுடைய வெகுளியான பேச்சால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் தாமரை.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாமல் இங்கே வந்து விட்டேனே என தாமரை சொன்ன வார்த்தையைக் கேட்டு ரசிகர்கள் ஆறுதல் கொடுத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று கூறிய அதே தாமரை தற்போது பேசிய வார்த்தை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது.

வெகுளித்தனமான பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் புதுமுகமாக அறிமுகமான தாமரை தற்போது ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமாகிவிட்டார். அதுவரைக்கும் இவர் ஒரு மேடை கலைஞராக குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டும்தான் பரிச்சயமாகி இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்த இரண்டு வாரங்களுக்குள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தாலும் தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

மிரள வைச்சிட்டாங்களே
எவ்வளவு கவலைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை பார்த்து இனி வாழ்க்கையில் எல்லாம் மாறிவிடும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இங்கு நடப்பதை பார்த்ததும் மிரண்டு போயிருக்கிறார். தம் பெயரை சொல்லி சக போட்டியாளர்கள் தம்மையே ஏமாற்றிக்கொண்டு இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிராமத்து பெண்ணாக இருந்த இவர் இந்த மாதிரி தில்லாலங்கடி வேலையை பார்த்ததும் திணறித்தான் வருகிறாராம்.

ஆரம்பத்தில் அப்படி இருந்தாரே
இந்த சீசனில் ஆரம்பத்தில் முதல் வாரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ரொம்பவே என்ஜாய் பண்ணி கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் ஜாலியாகவும் இருந்ததால் இந்த நிகழ்ச்சி இப்படித்தான் இருக்கும் என்று தாமரைச்செல்வி நினைத்து விட்டார் போல, அதனால்தான் முதல் வாரத்தில் இவர் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது கூட இந்த வீட்டை விட்டு என்னை அனுப்பாதீங்க இங்கே தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வெகுளித்தனமாக இவர் பேசிய வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது.

புலம்ப வைத்துவிட்டார்கள்
தாமரைச் செல்வியின் வெகுளித்தனத்தை பிடித்துப்போன ரசிகர்கள் பலர் அவருடைய பெயரிலேயே ஃபேன்ஸ் பேஜ்களை ஒப்பன் செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பிரபலமான நடிகைகளுக்கு இருக்கும் அளவிருக்கு ரசிகர்கள் இவருக்கும் அதிகரிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வாரத்தில் நடக்கும் டாஸ்க்குகள் மற்றும் போட்டியாளர்களின் மனநிலை மாற்றத்தை பார்த்ததும் தாமரைச்செல்வி ரொம்பவே பயந்து விட்டாராம். அதனால் இங்கே வந்து தெரியாமல் மாட்டி விட்டேன் என்று புலம்பியிருக்கிறார்.

தாக்குப் பிடிக்க முடியுமா??
போட்டியாளர்களின் மன மாற்றத்தையும் அவர்களின் சமயோசித புத்தியையும் பார்த்த இவரால் இந்த வீட்டில் பல நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை என கூறி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் திணறும் திணறல்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு ஆறுதலாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காயின் டாஸ்க்குகளில் அபிஷேக்கும் பிரியங்காவும் இவருடைய பெயரை சொல்லி ஒவ்வொருவரிடமும் காயினை வாங்குவதற்காக செய்த தில்லாலங்கடி வேலைகளை இவர் கவனித்துக் கொண்டிருந்ததால் இந்த மாதிரி எல்லாம் பேசுகிறாரா?? என்று ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications