எனக்கு நெகட்டிவ் ட்ரோல்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்.. ரசிகர்களை மிரள வைத்த இசைவாணி
சென்னை: தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்பும் கமெண்டுகளை தான் அதிகமாக ரசிப்பேன் என்று இசைவாணி கூறியிருக்கிறார்.
நெகட்டிவ் கமெண்ட்களை பார்த்து தான் நான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளேன் என்று புது விளக்கம் இசைவாணி கொடுத்துள்ளார்.
இவருடைய இந்த வார்த்தையைக் கேட்டதும் நெகட்டிவர்ஸ் கொண்டாடி வருகின்றனர்.

நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பஞ்சமில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆர்வத்தோடு காத்திருந்தாலும் நெகட்டிவ்வர்ஸ் இந்த நிகழ்ச்சியை பற்றி பல்வேறு குறைகளை கூறி கொண்டிருந்தனர். என்னதான் நெகட்டிவ்வர்ஸ் குறை கூறிக் கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல இதில் கலந்து கொள்ளும் ஒரு சில போட்டியாளர்களும் அதிகமாக நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

அதுதான் ரொம்ப பிடிக்கும்
ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை ஆதரிப்பவர் ஒரு சிலராக இருந்தாலும், அதை எதிர்ப்பவர்கள் அதிகமாக இருப்பார். ஒருவருடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலர் தங்களுடைய மனக்குமுறலை கொட்டி வருவார்கள். அந்த மாதிரிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருந்த இசை வாணியை பற்றி பலர் குறைகூறி வருகிறார்கள். ஆனால் அதுவும் தனக்கு முன்னேற்றத்தை தூண்டும் வகையில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். என்னதான் நமக்கு ஆறுதல் கூறும் ட்ரோல்களாகவும் இருந்தாலும் அதையெல்லாம் விட தம்மைப்பற்றி நெகட்டிவாக கூறும் கமெண்டுகளையும், ட்ரோல்களையும் தான் நான் அதிகமாக ரசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கானா பாடகி இசைவாணி
இசைவாணி ஒரு கானா பாடகியாக பலருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய கேரக்டரை பிடித்துப்போன பல ரசிகர்கள் இவரை மிஸ் பண்ணி வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இவர் செய்யும் செயல்களை பார்த்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் பிறரைக் குழப்பத்தில் தான் இருக்கிறார் என்றும் அதிகமாக தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லவில்லை என்றெல்லாம் இவருக்கு எதிராக கமெண்டுகளை ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இது புது தத்துவம் தான்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இசைவாணியிடம் பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். ஆனால் அதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கும் இசைவாணி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுதான் வெளியே வந்த பிறகு தன்னைப் பற்றி பல ட்ரோல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருவதை பார்த்து உள்ளாராம். அதில் இவரைப்பற்றி நெகட்டிவாக வரும் ட்ரோல்களை தான் அதிகமாக ரசித்து இருக்கிறாராம். படிக்கும் போது சிரிப்பு வந்தாலும், அது தான் நமக்கு முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும் என்று புது தத்துவத்தை உதிர்த்து இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications