Grand Finale:தீமை தான் வெல்லும் யார் தடுத்தாலும்- காஜல் பசுபதி வெளியிட்ட பதிவு..ரசிகர்களின் பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் எதிர்பார்க்காத வகையில் அசீம் டைட்டில் ஜெயித்துவிட்டார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில் அசீமுடைய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்த ரசிகர்களில் ஒருவர்தான் நடிகை காஜல் பசுபதி அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மாறாத கேரக்டர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாராதங்கள் என்று கூறுவது போல வெற்றி அமைந்துவிட்டது என்று பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் அசீம் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கொண்டு அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசிக்கொண்டு, தான் மட்டும் தான் மேலானவர் என்ற ஒரு எண்ணத்தில் இருந்து வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் அசீம் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் சேவ் ஆகி கொண்டிருந்தார்.

ரசிகர்களின் கருத்துக்கள்
இந்த நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக பிஆர் டீம் செயல்படுகிறது. பிஆர் டீ மூலமாக அதிகமாக பணம் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே அசீம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் இந்த சீசனில் விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவர் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு தரப்பட்ட ரசிகர்கள் கருத்து கூறிக் கொண்டிருந்தனர். தங்களுடைய ஆதரவையும் கூறிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அசீம் தான் உண்மையாக இருக்கிறார் கோபம் வந்தால் முகத்துக்கு நேராக பேசிவிட்டு மறு நிமிடம் அவர் மன்னிப்பு கேட்டு விடுகிறார். அதனால் அவர் எந்த இடத்திலும் நடிக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.

காஜல் பசுபதியின் பதிவு
இந்த நிலையில் இன்று எதிர்பார்க்காத முடிவாக அமைந்துவிட்டது என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சில பிரபலங்களும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் பசுபதி தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "தீமை தான் வெல்லும் யார் தடுத்தாலும்" என்று மீம்ஸ் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு கேப்ஷனாக ஆமாம் ப்ரோ, பேட் பாஸ் எஸ் பாஸ் என்று கொடுத்திருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் கேள்விகள்
இந்த நேரத்திலும் நீங்கள் பிக் பாஸ் பினாலே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இல்லை என்று கூறி இருக்கிறார். அதுபோல நல்லதை விட கெட்டதை இஷ்டப்பட ஆரம்பிச்சுட்டாங்க நம்ம மக்கள் என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்திருக்க ஆமா அதுதான் உண்மை என்று காஜல் பசுபதியும் பதிலளித்திருக்கிறார். தற்போது அசீமுடைய ரசிகர்கள் பலர் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றனர்இருக்கின்றனர். அசீம் உண்மையில் இருந்தார் அதனால் அவர் ஜெயித்தார் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications