40 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலிக்க நேரமில்லை சீரியலின் மூலமாக பலருக்கும் தெரிந்த நடிகையாக இருக்கும் சந்திரா லக்ஷ்மனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தன்னுடைய குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

குழந்தைக்கு பலரும் ஆசிர்வாதங்களை அனுப்பி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் சந்திரா லக்ஷ்மனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

90ஸ் ஹிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்

90ஸ் ஹிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்

சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தான் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றனர்.அந்த வகையில் ஒருவராக இருந்து வருகிறார் சந்திரா லக்ஷ்மன். இவர் 90s களின் ஃபேவரைட் சீரியலான காதலிக்க நேரமில்லை சீரியலில் மூலமாக பலருடைய மனதையும் கவர்ந்துள்ளார். சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க நேரமும் வயதும் இல்லை என்பதை தற்போது நிரூபித்துள்ளார். சந்திரா லக்ஷ்மன் கடந்த வருடம் தான் டேஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருடைய திருமண செய்தியை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

முணுமுணுக்கப்படும் பாடல்

முணுமுணுக்கப்படும் பாடல்

90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் சீரியலில் ஒரு சில சீரியல்களில் வரும் பாடல்கள் இப்ப வரைக்கும் ரசிகர்களால் அதிகமாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸ்களையும் கவர்ந்த பாடல் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" என்று காதல் செய்பவர்களின் மன ஒலியாக இந்த பாடல் இப்ப வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலில் பவ்யமான முக அழகை காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தவர் தான் சந்திரா லக்ஷ்மன். இவர் பல சீரியல்களிலும் சினிமாக்களிலும் நடித்திருந்தாலும் தற்போது இவரை அதிகமான ரசிகர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தாய்மைக்கு வயது தேவை இல்லை

தாய்மைக்கு வயது தேவை இல்லை

தாய்மை என்பது ஒரு மிகப்பெரிய வரம் அது தற்போது 40 வயதில் நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான சந்தோஷத்தை ரசிகர்களோடு அவர் பகிர்ந்து இருக்கிறார். ஒரு சிலர் இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இருந்தே இந்த நாளுக்காக காத்திருந்தனர் .இவர் கர்ப்பமாக இருக்கும் போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் குழந்தை எப்போது பிறக்கும் என்று ஆர்வத்தோடு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

ஆண் குழந்தை பிறந்தது

ஆண் குழந்தை பிறந்தது

தன்னுடைய குழந்தை பிறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் இருந்தபடியே புகைப்படத்தை வெளியிட்டு இன்னும் சில நிமிடங்களில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போகிறது என்று சந்திரா பதிவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. தன்னுடைய குழந்தையின் கைகளை சந்திரா மற்றும் அவருடைய கணவர் தாங்கி பிடித்த படியே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, இது ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. எங்களுக்காகவும் எங்களில் ஒருவருக்காகவும், அன்பிற்கும் ,ஆசீர்வாதத்திற்கும் மற்றும் பிரார்த்தனைகளின் சுமைகளுக்காகவும் எங்கள் பெற்றோர் மற்றும் நலம் விரும்புகளுக்கு நன்றி என்று கூறி இருக்கின்றனர். இவருடைய இந்த பதிவிற்கு நடிகை கனிஹா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, பாபா புதிய பெற்றோரையும் ஆசீர்வதிப்பாராக என்று கூறிய கருத்து வெளியிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+