எது எல்லை, எது வரம்பு என்பதை சொல்ல வேண்டிய நேரமிது... கமலின் அதிரடி எச்சரிக்கை
சென்னை: இந்த வார பிக் பாஸ் பஞ்சாயத்தில் கமல் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பொம்மை விளையாட்டில் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை கண்டிப்புடன் முதல் ப்ரமோவில் குத்திக் காட்டி இருக்கிறார்.
இந்த வாரத்தில் பஞ்சாயத்து வேற லெவல் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேரக்டரை காட்டும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கும் இருக்கும் குணநலன்களை வெளியே கொண்டு வரும் வகையில் தான் ப்ளான் போட்டு இருந்து வருகிறது. இந்த வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க வேண்டுமென்றால் முகமூடியுடன் இருக்க முடியாது. தன்னுடைய சுய கேரக்டரில் தான் இருக்க முடியும் என்பதை ஒவ்வொரு டாஸ்க்கும் நிரூபித்து வருகிறது. ஒரு சில போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நபராக இருப்பார்கள். போகப்போக தான் அவர்களுடைய உண்மை முகம் தெரிந்து இவரா இப்படி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒற்றுமை
ஒவ்வொரு சீசனிலும் இப்படி மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்து கொண்டிருந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுக்கொன்று ஆறுதலாகவும், அனுசரணையாக இருந்ததைப் பார்த்து, இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் இருக்காது என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏமாற்றமே மிஞ்சியது. நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்கள் தங்களுடைய உண்மை முகத்தை வெளியே காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

வேற லெவல் பர்பாமன்ஸ்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து இந்த வீட்டிற்குள் இருக்க வைத்திருக்கிறது. போட்டியாளர்கள் போடும் சண்டை சச்சரவுகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகரிப்பதால் தான் டிஆர்பி கூடும் என்பதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் செலவு பல மடங்கு செய்து வருகிறது. தற்போது பிக்பாஸ் மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆசைப்படியே போட்டியாளர்கள் இந்த வாரம் பர்பாமன்ஸ் பண்ணிவிட்டார்கள்.

கமலின் அதிரடி
பொம்மை பொம்மை டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இது வரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் ரசிகர்களின் காதுகளுக்கு கேட்க கூடாத வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். அதனால் தான் பிக் பாஸ் பீப் போட்டு அந்த வார்த்தைகளை மறைத்து இருக்கிறது. இதைப்பற்றி இன்று 'எது எல்லை எது வரம்பு' என்பதை தெளிவாக போட்டியாளர்களுக்கு சொல்ல வேண்டுமென்று கமல் கூறிய ப்ரமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications