Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனுக்கு டப் கொடுக்கும் கன்னிகாவின் காதல் வரிகள்... கரைந்து போனது ரசிகர்களின் மனது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது காதல் கணவருடன் கன்னிகா ரவி கருப்பு உடையில் கலக்கலான போட்டோ ஷூட்டிங் எடுத்துள்ளார்.

எத்தனையோ பேர் பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தாலும் தங்களுடைய காதல் என்றும் மாறாது என்று இவர்கள் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கணவர்தான் கவிஞர் என்றால் மனைவி சளைத்தவரல்ல என்று தற்போது கன்னிகாவும் நிரூபித்துள்ளார்.

காதல் தம்பதிகளின் அன்பு

காதல் தம்பதிகளின் அன்பு

திரைத் துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியது அல்ல. அது சின்னத்திரையில் இருந்தாலும் சரி, வெள்ளித்திறையாக இருந்தாலும் சரி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய காதல் என்றும் மாறாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடமே முடிவடைந்து இருந்தாலும் நாங்கள் என்றும் இப்படித்தான் என்று கன்னிகா ரவி மற்றும் சினேகன் நிரூபித்து வருகின்றனர்.

பொறாமை எல்லாம் உடைத்தெறிந்து

பொறாமை எல்லாம் உடைத்தெறிந்து

சின்னத்திரை மற்றும் வெள்ளித்தரையில் நடிகையாக நடித்து கொண்டிருக்கும் கன்னிகா ரவி மற்றும் பல திரைப்படங்களில் வெற்றிக்கு உயிர் கொடுத்திருக்கும் பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் எட்டு வருடமாக காதலித்து அதற்குபிறகு திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், தற்போது வரைக்கும் காதல் குறையாமல் தான் இருந்து கொண்டிருக்கிறோம் என்று கூறிவருகின்றனர். இவர்களுடைய அன்பை பார்த்து பலபேர் பொறாமைப்பட்டு இவர்களுடைய திருமண வாழ்க்கையைக் கெடுப்பதற்காக எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும் இவர்கள் இருவரின் மனதும் இருக்கும் தைரியத்தால் அதையெல்லாமஉடைத்து வந்துள்ளார்கள்.

கணவன் திறமையை தெரிய வைத்த மனைவி

கணவன் திறமையை தெரிய வைத்த மனைவி

திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய காதல் கணவரின் முன்னேற்றத்திற்கும் அவர் எழுதிய பாடல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தற்போது தன்னுடைய கணவர் எழுதிய பாடல்களை ரீவைண்ட் செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து பல ரசிகர்கள் இது எல்லாம் சினேகன் எழுதிய பாடல்களா என்று அதிசயப்பட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு பாடல் பிடித்து இருந்தாலும் அது யார் எழுதியது என்று தெரியாமல்தான் ரசிகர்கள் இப்ப வரைக்கும் இருந்து வந்துள்ளனர்.

பின்னணியில் பாடல் வரிகள்

பின்னணியில் பாடல் வரிகள்

கன்னிகா திரைப்படங்களில் தனக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என்று இவ்வளவு நாட்களாக காத்திருந்தாலும் தற்போது அது கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய கணவருடன் போட்டோஷூட் வீடியோ ஒன்றை எடுத்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு தன்னுடைய குரலால் பின்னணியில் கணவரின் பாடலை சேர்த்துள்ளார். யாரோ..நீ யாரோ..நாம் ஏனோ சந்தித்தோம்!! ஏனோ சம்மதித்தோம்...!! நட்போ காதலோ நம்மை சேர்த்தது, தப்போ சரியோ நம்மை ஈர்த்தது, என்ன உறவு இருந்துவிட்டு போகட்டும்..!!!கடைசி வரைக்கும் இருப்போம்... உனக்காக நானும், எனக்காக நீயும், அருகில் இருந்திருந்தால் அரவணைத்து சொல்லி இருப்பேன்...!!தொலைவில் இருக்கிறாய் தூதனுப்பி சொல்கிறேன்...!!!என்று சினேகனின் பாடல் வரிகளை தன்னுடைய குரலால் பெருமை வெளிப்படுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+