கர்நாடக அரசையே உலுக்கிய காந்தாரா திரைப்படம்! சாமியாடிகளுக்கு உதவி தொகை அறிவிப்பு!
சென்னை: கன்னட மொழியில் வெளியாகி தற்போது பல மொழிகளில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா திரைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வ நர்த்தனர்களுக்கு அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.
கேஜிஎப் படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீது அனைத்து திரைப்பட ரசிகர்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டு இருந்தது. தற்போது அந்த வரிசையில் காந்தாரா திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.
சுமார் பத்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் மூலமாக இதில் குறிப்பிட்ட நந்தனர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது, அனைத்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

காந்தாரா கதை சுருக்கம்
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் தற்போதைய அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த திரைப்படத்தில், ஒரு அரசர் நிம்மதியை இழந்து தவிக்கிறார். நிம்மதியை தேடி புறப்படுபவர் மலை கிராமப் பகுதி ஒன்றில் மக்கள் கற் சிலை ஒன்றை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கே இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதால் இந்த கற்ச்சிலையால் தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அந்த சிலையை தனக்கு தரும்மாறு கேட்கிறார். சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்து வாசி, ஒருவர் சத்தமாக கத்தி அந்த கத்தல் ஒலி கேட்பது வரையிலான அரசினரின் நிலங்களை கிராமத்து மக்களுக்கு தந்தால் கற்சிலை கடவுளை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார் .அதற்கு அரசரும் சம்மதித்து அந்த கிராமத்து மக்களுக்கு தனக்கு சொந்தமான நிலங்களை தந்து கல் சிலை கடவுளை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.

நிலத்திற்கான போராட்டம்
பல வருடங்களுக்குப் பிறகு அந்த மன்னரின் வாரிசுகள் தங்கள் முன்னோர்கள் கொடுத்த நிலத்தை அபகரித்து விட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்கின்றனர் அப்போது நீதிமன்ற வாசலில் ஒரு வாரிசு இறந்து விடுகிறார். அடுத்தடுத்து வாரிசுகள் நிலத்தை மீண்டும் மீட்பதற்காக செய்யும் போராட்டங்கள் மற்றும் அந்த நிலத்தில் இருக்கும் கிராமவாசிகளின் போராட்டங்கள் பற்றியதாக இந்த திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரிஷப் செட்டி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சப்தமிக் கவுடா நடித்திருக்கிறார். கிராம வாசிகள் தேய்வ நந்தகர்களாக பூஜை செய்வது, அருள் பெறுவது போன்ற பல சீன்கள் அடிக்கடி வரும் அதுபோல தெய்வ நர்த்தகர்களின் கஷ்டங்களையும் அதில் காட்டிருப்பார்கள்.

சாமியாடுபவர்களின் வாழ்க்கை
இந்த திரைப்படத்தில் தெய்வ நர்த்தகர்கள் சாமி ஆடுவதற்கு முன்பு பல மணி நேரமாக முகத்தில் அலங்காரங்களை எல்லாம் போட்டு பின்பு சாமி முன்பு இவர்கள் அருள் வந்த பிறகு பார்ப்பவர்கள் மிரளும் வகையில் ஆடுவார்கள். இவர்கள் தமிழகத்தில் சுடலைமாடசாமி ஆடுவது போல தான். ஆனால் சுடலைமாடசாமி ஆடுபவர்களுக்கு சாமி வந்த பிறகுதான் அவர்களுக்கு அலங்காரம் செய்யப்படும். ஆனால் தெய்வ நர்த்தகர்கள் சாமி வருவதற்கு முன்பே அலங்காரங்களை செய்த பிறகு தான் அவர்களுக்கு சாமி வருகிறது. இந்த திரைப்படங்களில் நர்த்தகர்கள் படும் வேதனைகளும் கஷ்டங்களும் காட்டப்பட்டுள்ளது.

அரசின் உதவித்தொகை
தற்போது தமிழக அரசு மூலமாக கிராமப்புற பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போல, இந்த திரைப்படத்தின் எதிரொளியாக தெய்வ நர்த்தகர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்ட கர்நாடக அரசு, 60 வயதிற்கு மேற்பட்ட தெய்வ நர்த்தவர்களுக்கு மாதந்தோறும் 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது காந்தாரா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி என்று திரைப்பட ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications