சோசியல் மீடியாவில் வந்த விமர்சனங்கள்.. இன்று படத்தின் ஹீரோயினி, ஆனாலும் குஷ்புவின் மகள் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ரசிகர்களின் மனதை முழுவதும் கவர்ந்த முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பூவின் மகள் அவந்திகா தற்போது ஹீரோயினாக தனது பயணத்தை தொடங்கியிருப்பது திரையுலகில் புதிய கவனத்தை பெற்றுள்ளது. "என்னை அம்மாவுடன் ஒப்பிடுவார்கள் என்பது எனக்கே தெரியும்" என்று அவர் அளித்துள்ள திறந்த மனப்பாங்கான பேட்டி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
குஷ்பூ தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். பின்னர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுடன் தொடர்புடைய பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைய மகளான அனந்திகா, நடிப்பை விட இயக்கத் துறையில் ஆர்வம் கொண்டு இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். 'பொன்னியின் செல்வன்', 'பொன்னியின் செல்வன் 2', 'தக் லைஃப்' போன்ற படங்களில் அவர் பணியாற்றியிருப்பது அவருடைய தொழில் ஆர்வத்தை காட்டுகிறது.
மூத்த மகளான அவந்திகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் 'ஆரம்பம்' திரைப்படம் அவரது முதல் படம். மலையாள இயக்குநர் சுஜேஷ் இயக்கும் இந்த படத்தில் சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். இதே நேரத்தில், சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' படத்திலும் அவந்திகா நடித்து வருகிறார்.
சினிமாவிற்கு வருவது குறித்து அவர் கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. வீட்டில் இந்த முடிவை தெரிவித்தபோது, இது சாதாரண விஷயம் இல்லை என்று சொல்லியும், முழு ஆதரவு அளித்தும் குடும்பம் அவரை உற்சாகப்படுத்தியதாக கூறியுள்ளார். அதன் பிறகு உடல் எடையை குறைத்து, முழுமையாகத் தயாராகி தான் இந்த துறைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அம்மாவுடன் ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது என்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் பலருடைய வாரிசுகள் சினிமாவில் வரும்போது இதே போல தான் ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு இருப்பார்கள். குஷ்பூ பெற்ற புகழும், அவருடைய உழைப்பும் தான் தன்னுடைய முன்னோட்டமாக இருக்கும் என்றும், அதே அளவுக்கு உழைத்தால்தான் அந்த இடத்தை அடைய முடியும் என்றும் அவந்திகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Khushbu : ரஜினிகாந்த் பற்றி வன்மம் நிறைந்த பேச்சு! உங்க வீட்ல இருந்து யாராவது! அதிரடியாக பதிலடி கொடுத்த குஷ்பூ
வீட்டில் இருந்து எந்த அழுத்தமும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் வளர்த்ததாகவும், தன்னுடைய தேர்வுகளை தானே செய்யும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட அவந்திகா, அதனை சவாலாக எடுத்துக் கொண்டு கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் திரை முன்னேற்பாட்டுக்கு தேவையான மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். தற்போது நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் நிற்கும் நடிகையாக வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறுகிறார்.
குஷ்பூவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், அந்த எதிர்பார்ப்பை தன் உழைப்பால் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலையில் அவந்திகா இருக்கிறார். சினிமாவில் குடும்ப பின்னணியுடன் வருவது எளிதாக இருந்தாலும், தனித்த அடையாளம் உருவாக்குவது தான் உண்மையான சவால். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு தனது பயணத்தை தொடங்கியுள்ள அவந்திகாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
-
அவரு சினிமா இயக்குநருயா.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. சுந்தர் சிக்கு டப்பிங் கொடுத்த ஏ.சி.சண்முகம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications