வலியை மறந்து சிரித்தபடியே பாடிய மகள்.. அறுவை சிகிச்சையை பற்றி கூறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
சென்னை:கடந்த ஆறு மாத காலமாக மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை குறித்து தான் கற்றுக் கொண்ட பாடத்தையும், தெரிந்து கொண்ட விஷயங்களை அறிவுரையாக வழங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ட்விட்டர் பதிவுகளுடன் தன் மகள் பாடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் மகள் பாடுவதை கேட்டப் பலர் குரல் அருமையாக இருக்கிறது என்றும் பாராட்டி வருகின்றனர்.
விரைவில் பூரண நலமடைய தங்கள் வாழ்த்துக்களையும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு கூறி வருகின்றனர்.

பரபரப்பாய் பேசப்பட்ட லட்சுமிராமகிருஷ்ணன் பெயர்
சிறிது நாட்களுக்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இசையமைப்பாளர் இளையராஜா முன்பு தரையில் அமர்ந்திருந்தது போல் வந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பிய சமயத்தில் இளையராஜா போன்றவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும், தன் தந்தைக்கு சமமானவர், அவர் முன் தரையில் அமர்வது தன்னுடைய சுய விருப்பம் என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர் அழைக்கப்படவில்லை என்றும் அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விழா ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வீடியோ பரவியது.

வீடியோ குறித்த விளக்கம்
வீடியோவை குறித்து விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அது ஒரு சின்ன கவனக்குறைவால் ஏற்பட்ட குழப்பம் தான், அதை ஒரு சில மீடியாக்கள் தான் பெரிதாக்கி விட்டனர். மற்றபடி ஏதும் பிரச்சனை இல்லை என்றும், தனக்கு கிடைக்க வேண்டிய விருது கிடைப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆனது அவ்வளவுதான். தங்கள் தவறை உடனே சரி செய்து எனக்கு விருது வழங்கிய விழா குழுவினருக்கும் விருதை அறிவித்த முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதிர்ச்சி அளித்த ட்விட்டர் பதிவு
இவ்வாறு கொஞ்ச நாட்களாக சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பேசும் பொருளாக இருந்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன்,ஓணம் பண்டிகையை ஒட்டி வாழ்த்து செய்தியோடு அவர் கூறியிருந்த விஷயம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.கடந்த ஆறு மாத காலமாக தனது மகள் உடல்நிலை சரியில்லை என்றும் தற்பொழுது நன்றாக இருப்பதாகவும், மருத்துவ குழுவினருக்கு நன்றி கூறி பதிவிட்டிருந்தார். இவ்வளவு பெரிய மனக்கவலைகள் இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக வழக்கம் போல் தன்னுடைய வேலைகளை எந்த வித்தியாசமும் காட்டிக் கொள்ளாமல் செய்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணனை பலர் பாராட்டியும் ஆறுதலும் கூறி வந்தனர்.

ஆப்ரேசன் குறித்த அறிவுரை
தற்போது நன்கு உடல்நிலை தேறி வரும் தன்மகள் அழகாக பாடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் "கடந்த 6 மாத அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், கற்றுக்கொண்ட பல பாடங்கள்! மிக முக்கியமாக, பலரிடம் கருத்துக்களை கேட்டுக்கொள்வதற்கு முன் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டாம். அறுவைசிகிச்சை செய்ய முயற்சிக்கும் முன், உங்களிடம் அனைத்து தகவல்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யுங்கள்! சாதா அல்ட்ரா ஸ்கேன் போதாது" என்று அறிவுரை செய்துள்ளார்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications