லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இப்படி ஒரு சோகமா!? உண்மையில் இரும்பு பெண்மணி தான்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை; லட்சுமி ராமகிருஷ்ணனின் ட்விட்டர் பதிவை பார்த்த இணையதளவாசிகள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தங்களுடைய ஆறுதலை கூறி வருகின்றனர்.
20 மருத்துவர்கள் சேர்ந்து காப்பாற்றும் அளவிற்கு அவரது மகளது உடல்நிலை இருந்தும் அந்த சோகத்தை வெளி காட்டிக் கொள்ளாமல் எப்படி இவ்வளவு நாட்கள் சாதாரணமாக இருந்துள்ளார் என்று வியந்து வருகின்றனர்.
நிஜமாகவே லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இரும்பு பெண்மணி தான் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை மற்றும் இயக்குனராக
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக அவரது அறிமுகம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார்.தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் செய்த இந்த செயல் அந்த நேரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. தன்னுள் இருக்கும் இயக்குனர் திறமைக்கும் வேலை கொடுக்கும் பொருட்டு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, வீட்டுஉரிமையாளர்,அம்மானி போண்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன்
பல படங்கள் நடித்திருந்தாலும், சில படங்களை இயக்கியிருந்தாலும்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலத்தை பெற்றிருந்தார்.பிற குடும்பங்களின் பிரச்சனைகளை பொது வெளியில் பேசுவது குறித்து பல விமர்சனங்களை இவர் சந்தித்து வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மூலம் ஒரு குடும்ப பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறிக்கொண்டு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை குறித்து வரும் பல கலாய்ப்புகளையும் மீம்ஸ் கண்டெண்டுகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் சமூக பிரச்சினைகளுக்கு தேவையான போது தன் குரலை கொடுத்து வந்தார்.

வியந்து போன ரசிகர்கள்
ஓணத்திற்கு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் அதனுடன் இணைத்து தன்னுடைய மகளை குறித்து போட்டுள்ள பதிவு இவ்வளவு நாட்களாக இந்த சோகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் பொது வெளியில் சாதாரணமாக உலா வந்தாரா..!!?? என்று லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து வியந்து வருகின்றனர்.

அயன் லேடி ஆக ஆறு மாதம்
லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில், இனிய ஓணம் நண்பர்களே, வீட்டில் ஒரு சிறிய கொண்டாட்டம் இருந்தது, எங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் 6 மாதங்கள் ஆகிறது. இது ஒரு நெருக்கடி, ஆனால் அவரது அருளால் 20 மருத்துவர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், இறுதியாக டாக்டர் ராமசுப்பு இங்கு வரை எங்களை வழிநடத்தினார், ஸ்ரேயா முழுமையாக குணமடையவில்லை என்றாலும் சிறப்பாக செயல்படுகிறார். என்று பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவை பார்த்த இனையவாசிகள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications