எட்டா முடியா உயரத்தில் விஜய்..இந்த வருடத்தின் முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் இந்த திரைப்படம்??
சென்னை: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டராக இருந்து வரும் தளபதி விஜய்,"மாஸ்டர்'படத்தின் மூலம் இந்திய அளவில் தான் ஒரு வசூல் தளபதி என்று நிரூபித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் இந்த திரைப்படம் உள்ளது.இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
இது விஜய்க்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கே பெருமை என்றும் பிரபலங்கள் பலர் தளபதி விஜய்க்கும் மாஸ்டர் பட குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொரானா ஊரடங்கு
உலகமே இதுவரை கண்டிராத ஒரு முடக்கத்தை கொரானா ஊரடங்கு மூலம் மிகப்பெரிய முடக்கத்தை கண்டது.சிறு தொழில் தொடங்கி மிக பெரிய தொழில் வரை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் வெகுவாக பாதிக்கப்பட்டது திரையரங்குகள் எனக்கூறலாம்.கொரனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக அரசு தளர்த்தி வந்த சூழ்நிலையில் கூட திரையரங்குகள் மீண்டும் திறக்கப் படுமா..?படாதா..? என்ற கேள்வியே இருந்தது. அப்படியிருக்க இறுதியாகவே திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. திரையரங்குகளையும் திரைத் துறையை நம்பி வாழ்ந்துவந்த பல தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்ட நிலையில், திரை உலகை மட்டுமே நம்பி இருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு அவர்கள் மனதில் சற்று பாலை வார்த்தது.

மாஸ்டர் படம்
அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தும் திரையரங்க உரிமையாளர்கள் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருவார்களா..? வர மாட்டார்களா..? என்ற அச்சத்தில் இருந்தனர். பார்வையாளர்களை திரையரங்கிற்கு வர வைக்க அப்பொழுது ரிலீசுக்கு தயாராக இருந்த மாஸ்டர் திரைப்படத்தையே பெரிதும் நம்பி இருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃபேமிலி ஆடியன்சை விஜய்யால் மட்டுமே திரையரங்கிற்கு வர வைக்க முடியும் என்று உறுதியாக இருந்தனர்.அவர்களது நம்பிக்கையை மாஸ்டர் படம் பொய்யாக்கவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு திரை உலகிற்கு மறு வாழ்வையும் புத்துணர்ச்சியும் கொடுத்தது மாஸ்டர் படம்.

விஜய்க்காக உருவாக்கிய கதை
ரசிகர்களின் நாடியை புரிந்து படமெடக்கும் இயக்குனர்களை அழைத்து உடனே தமக்கு ஒரு படம் பண்ண சொல்லுவதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்.அதையே பின்பற்றிய விஜய்யும் அந்த நேரத்தில் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் அழைத்து தமக்கும் ஒரு படம் பண்ணச் சொல்லி உருவானதுதான் மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தனது பாணியில் ரா வாக எடுத்திருந்தாலும், விஜய்க்காக கொஞ்சம் ஸ்டைலிஷ் சேர்த்திருந்தார். இவைகள் எல்லாம் இணைந்து மாஸ்டர் படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்தது.

முதல் நாள் வசூலில் முதலிடம்
வருடாவருடம் கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் டாப் 5 படங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும் விஜய் படம், இந்த வருடம் இந்திய அளவில் டாப்பில் இருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.தங்கள் தளபதியின் படம் இந்திய அளவில்முதல் நாள் வசூலில் முதலிடம் பெற்றதை அவரது ரசிகர்கள் டிரென்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட விஜய்க்கு இது இந்திய அளவில் கிடைத்த சிறப்பான அங்கீகாரம் என்று பல பிரபலங்கள் விஜய்க்கும் மாஸ்டர் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் ரூபாய் 42.2 கோடி வசூலை அள்ளி உள்ளது.












Click it and Unblock the Notifications