குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சரவணன் மீனாட்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி.. குழந்தையை பற்றி உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் முதல் பாகத்தில் நடித்த மெர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
எட்டு வருடம் கழித்து சின்னத்திரை தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததை குறித்து பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மெர்ச்சி செந்தில் தன்னுடைய குழந்தை பிறந்ததை பற்றி உருக்கமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரீல் மற்றும் ரியல் ஜோடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் சீரியல் மற்றும் ஜோடியாக அனைவரையும் கவர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா ரசிகர்களின் ஆதரவை அமோகமாக பிடித்திருந்தனர். முதல் சீரியலிலே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீஜா ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் செந்திலுடன் மாப்பிள்ளை என்னும் சீரியலில் ஜோடி சேர்ந்தனர்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம்
சரவணன் மீனாட்சி சீரியலில் கணவன் மனைவியாக நடித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து செந்தில் மற்றும் ஸ்ரீஜா சமீபத்தில் தான் 8 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையதளத்தில் வெளியிட்டிருந்தனர். தங்களுடைய வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தங்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்க கேட்டிருந்தனர். பல வருடங்களாக இவர்களை காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்த இவர்களுடைய ஃபேவரட் ரசிகர்கள் பலர் இவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

மகன் வந்து விட்டான்
செந்தில் நடிகராக மட்டுமல்லாமல் ரேடியோ ஜாக்கி ஆகவும் டிவி தொகுப்பாளராகவும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டு சீசனிலும் கதாநாயகனாக இவர்தான் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த சீரியலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது. இந்த நிலையில் தங்களுக்கு மகன் பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை செந்தில் தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்த சில நொடிகளில் வாழ்த்துக்கள் மள மளவென அதிகரித்து வருகிறது.

வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்
பெற்றோர்களாக பிறந்துள்ளோம் எங்கள் மகனால் நேற்று என்று தன்னுடைய மகனைக் குறித்து மகிழ்ச்சியாக பதிவிட்ட செந்தில், நேற்று எங்கள் மகனுக்கு பெற்றோராக பிறந்தோம். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என்று ரசிகர்களிடம் நன்றியையும் கூறி இருக்கிறார். ஒரு அழகான புகைப்படத்தை செந்தில் பகிர்ந்ததை தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஸ்ரீ தேவி அசோக், வி ஜே மகாலட்சுமி, தீபா என பல நடிகைகள் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications