பாவனிக்கு இதே வேலையா போச்சு...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: இன்றைய முதல் ப்ரமோவில் சண்டை போடும் பாவனியை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
வர வர பாவனிக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வர தொடங்கிவிட்டது.
நெட்டிசன்கள் கலாய்த்தாலும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு தான் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இளைஞர்களின் கனவு கன்னி
பாவனி ரெட்டி என்னும் பெயரைச் சொன்னதுமே சீரியல் ரசிகர்கள் முதல் இணையதள ரசிகர்கள் வரை பலருக்கும் பரிச்சயமானவர் தான். சில இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாவனி, யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவருடைய என்ட்ரி எதிர்பார்க்காத ரசிகர்கள் சிலர் இன்ப அதிர்ச்சி அடைந்து இருந்தனர். ஆனாலும் தங்கள் தலைவிக்கு நாங்கள் கொடுக்கிறோம் ஆதரவு என்று முதல் ஆளாக இந்த சீசனில் இவருக்குத்தான் ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களை தொடங்கினார்கள்.

கலங்க வைத்த சோக கதை
முதல் வாரத்தில் போட்டியாளர்கள் தங்களுடைய கடந்த கால வாழ்க்கையில் சோகக் கதையைக் கூறி கொண்டிருக்கும்போது இவர் தன்னுடைய கதையை கூறி அனைவரின் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு என்று ரசிகர்கள் தினமும் ஆதரவுகளை மழைபோல குவிக்க தொடங்கிவிட்டார்கள். முதல் வாரத்தில் இவருடைய பெயர் எலிமினேஷனில் வரவில்லை. ஏனென்றால் இவருடைய மதிப்பு போட்டியாளர்களின் மத்தியிலும் நன்றாகவே இருந்தது.

அந்த ஒரு செயல் தான்
ஆனால் இவர் எதார்த்தமாக காயின் டாஸ்க்கில் தாமரைச் செல்வியின் காயினை எடுப்பதற்கு சுருதிக்கு உதவி செய்தது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. அதுவும் இவர் பிளான் போட்டு உள்ளே சென்று விட்டு, நான் ப்ளான் போடவே இல்லை என்று கூறியது தான் அனைவருக்கும் இவர் மீது வெறுப்பு தோன்றக் காரணமானது. இதுவரைக்கும் இவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் கூட ஒரு சிலர் அப்படியே மாறி விட்டார்கள். அதற்குப் பிறகு இவர் பல நேரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது.

ப்ரமோவில் சண்டை
தற்போது இந்த வாரத்தில் வீட்டின் முழு ஆளுமை பெற்ற நிரூப்க்கும், இவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். அடிக்கடி ப்ரமோவில் இப்படியே சண்டைக்காட்சிகளில் இவர் வந்து கொண்டிருக்கிறாரே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர். ஆரம்பத்தில் ப்ரமோவில் பாவனியை காட்டுங்கள் என்று கெஞ்சிய ரசிகர்கள் இப்போது பாவனிக்கு இதுவே வேலை என்று சிலர் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications