டைட்டானிக் படத்தை விட எடிட்டிங் வேற லெவல்...பிரபல சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2வை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

நெட்டிசன்களின் கைவசத்தில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் மாட்டிக் கொண்டிருக்கிறது.

டைட்டானிக் படத்தை மிஞ்சும் அளவிற்கு மழை சீன் மட்டுமல்லாமல் தத்தளிக்கும் நீரையும் காட்டி அனைவரையும் கண்ணீரில் தத்தளிக்க விட்டார்கள் என்று பலர் பொங்கி வருகிறார்கள்.

சலிப்பாகவே இருக்கு பாஸ்

சலிப்பாகவே இருக்கு பாஸ்

சமீப காலமாகவே திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் கதைக்கு பஞ்சமாகத் தான் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைப்படங்களில் தான் வந்த கதையே திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் சீரியல்களிலும் அதுதான் நடக்கிறது என்பது பலருடைய கவலையாக இருந்து வருகிறது. பலரும் தங்களுடைய மனக் கவலையை தீர்ப்பதற்காக பொழுதுபோக்கை நாடி சினிமா சீரியல் என்று பார்க்கலாம் என்று இருந்தால் அதிலும் அலுத்துப்போன கதைகள் தான் வந்து கொண்டிருக்கிறது என்பது பலருடைய வேதனையான பதிவாக இருந்து வருகிறது.

தொடங்கியது இரண்டாம் பாகம்

தொடங்கியது இரண்டாம் பாகம்

திரைப்படங்களாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒன்று இரண்டு மட்டும்தான் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்று விடுகிறது. அதுபோல ஒரு சில சீரியல்கள் எபிசோடுகளை நகர்த்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரால் கலாய்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே சீரியல் இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் முதல் சீசன் அதிக அளவில் வெற்றி அடைந்தது இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் கிடைத்த வெற்றியை பார்த்து தான் தற்போது இதில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜோடி மாறி போச்சு

ஜோடி மாறி போச்சு

ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக போகிறது என்று தெரிந்ததும் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர். ஆரம்பத்தில் கலகலப்பாக சென்று கொண்டு இருந்த இந்த சீரியலின் கதை திடீரென முழுவதுமாக மாற்றப்பட்டு விட்டது என்பது பலருடைய வாதமாக இருந்து வருகிறது. ஜீவா மற்றும் காவியா இவர்கள் இருவரும் காதலர்களாக அறிமுகம் ஆகின்றனர். அதில் ஜீவாவின் அண்ணனுக்கும் காவியாவின் அக்காவிற்க்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக காவியா ஜீவாவின் அண்ணனையும் ஜீவா காவியாவின் அக்காவையும் மணக்கிறார்கள். ஜோடி மாதிரி போன நிகழ்வால் ரசிகர்கள் இந்த சீரியலை ஆரம்பத்திலேயே கலாய்க்க தொடங்கி விட்டனர். காதலர்களாக அறிமுகமானவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை பார்க்கும் போது பலர் கலாய்த்து வந்தனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிடிக்காத வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழும் கதாபாத்திரங்களாக இவர்கள் வாழ்ந்து வந்தாலும் தற்போது ஜீவாவாக நடிக்கும் திரவியம் ராஜகுமார் மற்றும் பிரியாவின் காதல் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய எபிசோடில் மழையின் காரணமாக தத்தளிக்கும் குழந்தைகளையும், பெரியோர்களையும் ஜீவா காப்பாற்றி கொண்டிருக்கிறார். இதுதான் தற்போது நெட்டிசன்களின் கைவசம் சிக்கி இருக்கிறது. இதில் ஜீவா சென்று காப்பாற்றும் இடங்களில் மட்டும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருக்கிறது ஆனால் ரோட்டிலும் வீட்டிற்கு வெளியேயும் தண்ணீர் ஆறாக ஓடவில்லை. இதை பார்த்து ரசிகர்கள் பலர் டைட்டானிக் படத்தை மிஞ்சும் அளவிற்கு எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று கலாய்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் சீரியல் என்றாலும் அதற்கு ஒரு நியாயம் வேண்டாமா?? இப்படியா என்று பல்வேறு விதங்களில் கலாய்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வெளியே இல்லையே என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+