விக்ரமனை கலாய்த்து வந்த வனிதா கடைசி நேரத்தில் கொடுத்த எதிர்பாராத ஆதரவு!? கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவு ஷிவினுக்குத் தான் என முதல்முறையாக வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து விக்ரமனுக்கு எதிராக வனிதா பேசி வந்தார்.
அசீம் தான் உண்மையாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று பலமுறை அசீமிற்க்கு சப்போர்ட் செய்த வனிதா கடைசி நேரத்தில் மனம் மாறியதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பிக் பாஸ் ரிவ்யூ
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல பல்வேறு நபர்கள் ரிவ்யூ செய்து வருகின்றனர். கமல்ஹாசன் தீர்ப்பு வழங்குவதை போல இவர்கள் தினமும் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு தங்களுடைய தீர்ப்புகளையும் எண்ணங்களையும் பிரதிபலித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடைய ரிவ்யூ பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இவர்களுடைய youtube சேனல்களை தொடர்ந்து பார்த்து வருகிறனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளராகவும் நடிகையாகவும் இருக்கும் நடிகை வனிதாவும் ரிவ்யூ செய்து வருகிறார்.

விமர்சன பதிவு
இந்த ஆறாவது சீசனில் ஆரம்பத்தில் வனிதா விக்ரமனை பாராட்டி வந்தார். அதற்குப் பிறகு நாட்கள் செல்ல செல்ல அசீமை பாராட்டி வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரும் எதிர்த்து நின்றாலும் அசீம் தான் சரியாக விளையாடி வருகிறார் என்று அசீமுக்கு தன்னுடைய ஆதரவை அடிக்கடி தெரிவித்து வந்திருக்கிறார். இதனால் விக்கிரமனுடைய ரசிகர்கள் வனிதாவை இவர் அசீமுடைய பி ஆர் ஆக மாறிவிட்டார் என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் பதிவு வெளியிட அதை குறித்தும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து பதிவு வெளியிட்டு இருந்தார்.

மிரட்டல்கள்
இந்த நிலையில் வனிதாவுக்கு எதிராக பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் அதனைக் குறித்தும் அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்றும் வனிதா பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி ஓட்டுப்பதிவு நாளான நேற்று வனிதா தன்னுடைய ஆதரவு இந்த சீசனில் ஷிவினுக்கு தான். ஷிவின் தான் வெற்றி பெற வேண்டும் என தன்னுடைய ஆசையை கூறி, நிச்சயமாக இந்த சீசனில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர், தகுதியான போட்டியாளரான ஷிவினுக்கு வாக்களியுங்கள் என்று ஷிவனுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். இதைக் குறித்து நெட்டிசன்கள் அசீம் ஜெயிக்க மாட்டார் என்று தெரிந்ததும் இந்த பக்கம் திரும்பி விட்டீர்களா? வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

கடைசி நேர ஆதரவு
அது மட்டும் அல்லாமல் விக்ரமனுக்கு ஆதரவாக கமல் செயல்படுவதாகவும் அவ்வபோது வனிதா தன்னுடைய ரிவியூவில் குறிப்பிட்டு வந்ததாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வனிதா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அரசியல் நோக்கங்களுக்காக கமல்ஹாசன் தனது கட்சிக்கோ, வேட்பாளருக்கோ வாக்களிக்கவும் அல்லது தன் கட்சி போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்பதில்லை. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவால் மட்டுமே, பார்வையாளர்கள் அல்லாத வாக்குகள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி இருக்கையில் திடீரென்று இவர் ஷிவினுக்கு ஆதரவாக பதிவிட்டது தான் சமூக வலைதளத்தில் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications