எவ்வளவு நாள்தான் இப்படியே? சுந்தரி சீரியலில் இதை கவனிச்சிங்களா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது அந்த சீரியலின் கதையைப் பற்றி நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்த கதையின் விறுவிறுப்பு இப்போது இல்லை என்பது பலருடைய குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் சுந்தரி எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருப்பது பார்க்க பிடிக்கவில்லை என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

கிராமத்து பெண்ணின் ஐஏஎஸ் ஆசை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக கேப்ரெல்லா செல்லஸ் நடித்து வருகிறார். இந்த சீரியல் பிப்ரவரி 22,2021 அன்று ஒளிபரப்ப தொடங்கியது. இந்த சீரியலில் கதாநாயகனாக விஷ்ணுமேனன் கார்த்திக் கேரக்டரில் நடித்து வருகிறார். சுந்தரி சீரியல் ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. காரணம் கருப்பாக கிராமத்து பெண்ணாக இருக்கும் சுந்தரி ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் போது தனக்கு எதிர்பாராமல் கார்த்திக் உடன் திருமணம் நடைபெற்றாலும் இனி திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என நினைத்தவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

சுந்தரிக்கு தெரிந்த உண்மை
கார்த்திக் ஏற்கனவே அனுவை காதலித்து அவரையும் ரகசியமாக திருமணம் செய்திருந்ததால், தற்போது அனு கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் சுந்தரியோடு வெறுப்பாகவே இருக்கும் கார்த்திக் முதல் திருமணம் மொத்த ரகசியமும் சுந்கரிக்கு தெரிந்து விட்டது. இதற்கு பிறகும் சுந்தரி கார்த்திகை பற்றி அனுவிடம் எந்த ரகசியத்தையும் கூறாமல் இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் கார்த்திக் சுந்தரியை அவமானப்படுத்தும் போதும் சுந்தரி அனுவிற்காக தான் கார்த்திக்கை விட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை எப்போ பிறக்கும்
இந்த நிலையில் இந்த சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களில் கர்ப்பமான அணு தற்போது ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே கர்ப்பமாக இருப்பதாக நடித்து வருகிறார். அதுவும் அவருடைய வயிறு தெரிய ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு குழந்தை மட்டும் இன்னும் பிறக்கவில்லை. இந்த நிலையில் இவர் பெங்களூர் சென்னை என ஒவ்வொரு ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார் .இதுவெல்லாம் பார்ப்பதற்கு நம்புற மாதிரியா இருக்கு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் அதில் சுந்தரி ஒவ்வொரு முறையும் அணுவையும், கார்த்திகையும் காப்பாற்றிக் கொண்டிருந்தாலும் சுந்தரியின் மீது அனு அதிகமாக கோபத்தில் இருக்கிறார்.

இதுதான் பிடிக்கவில்லையாம்
சுந்தரியைப் பற்றியும் எந்த ரகசியமும் அணுவிற்கு தெரியாமலே குடும்பத்தினர் அனைவரும் மறைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனாலே இந்த சீரியலில் விறுவிறுப்பு குறைந்து விட்டதாகவும் எப்போது பார்த்தாலும் சுந்தரி அழுது கொண்டும் ஐயோ என்று கதறி கொண்டும் இருப்பதை பார்க்கும் போதே பார்க்கும் ரசிகர்களுக்கு வெறுப்பாக இருப்பதாக பலர் கருத்து கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியலில் சுந்தரியின் கேரக்டர் போல்டாகவே காட்டப்பட்டது.அதுவும் கார்த்திக் விஷயத்தில் சுந்தரி நடந்து கொண்டது பலருடைய பாராட்டையும் பெற்று வந்தது. ஆனால் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று படிக்கும் போது சுந்தரிக்கு வரும் தலைவலி தற்போது அவருடைய மாமா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது வரவில்லைய? என்பதும் பலருடைய கேள்விகளாக இருக்கிறது.
-
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications