பெரும் புகைச்சல்.. பேச்சே கொடுக்கலை.. திடீரென சைலண்ட்டான இபிஎஸ்.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
சென்னை: புயலுக்கு முன் அமைதி.. நெருப்பு இருந்தால்தான் புகை வரும் என்றெல்லாம் சொல்வார்களே.. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அதிமுகவில் நடந்து கொண்டு இருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், அதிமுக கட்சி கிட்டத்தட்ட கப்சிப் மனநிலைக்கு சென்றுவிட்டது. முன்னாள் ஆளும் கட்சி என்ற சுவடே தெரியாத அளவிற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் தொகுதிகளில் சைலண்ட்டாக இருக்கிறார்கள்.
அதிலும் தமிழகம் பல முக்கிய பிரச்சனைகளை, அதிகரிக்கும் கொரோனாவை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக தலைவர்கள் சிலர் சீனிலேயே இல்லாதது கேள்விகளை எழுப்பி உள்ளது.

எதிர்க்கட்சி
தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராக ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து, அந்த பதவியை பெற்றவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஓ பன்னீர்செல்வம் உடன் இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கட்சிக்கு என்ன ஆகுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் வந்து, கடைசியில் ஓபிஎஸ் அரைமனதாக விட்டுக்கொடுத்தார். பல போராட்டங்களுக்கு பின்புதான் இபிஎஸ் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

ஆனால்
ஆனால் எதிர்கட்சித் தலைவர் ஆன பின் இபிஎஸ் கிட்டத்தட்ட அப்படியே சைலன்ட் ஆகிவிட்டார். தமிழகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசவில்லை. லாக்டவுன் குறித்து பேசவில்லை. தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் பெரிய அளவில் ஆக்டிவாக இருந்தார். மக்களுக்காக களத்தில் பணிகளை செய்தார், ஆளும் கட்சியிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி, திட்டங்களை வகுத்தார். ஆளும் கட்சியின் பல அறிவிப்புகள் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்தா ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்தான்.

இப்போது இல்லை
ஆனால் தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கும் இபிஎஸ் ஏனோ கொஞ்சம் சைலண்ட்டாக இருக்கிறார். ஆக்சிஜன் பிரச்சனை, ரெமிடிஸ்வர் பிரச்சனை உள்ளிட்ட சில விஷயங்களில் தொடக்கத்தில் இபிஎஸ் குரல் கொடுத்தாலும் திடீரென தற்போது சைலன்ட் ஆகிவிட்டார். அதிலும் டிவிட்டரில் இப்போதெல்லாம் இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து, இரங்கல் செய்திகளை தவிர பெரிதாக எதுவும் போஸ்ட் செய்யவில்லை.

ஏன்
ஆனால் இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸோ இன்று கூட இ பாஸ் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை திமுக அரசுக்கு வைத்து வருகிறார். அதிமுக லெட்டர் பேடில் தனது பெயரை மட்டும் போட்டு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகிறார். ஓபிஎஸ் இப்படி ஆக்டிவாக இருப்பதும், இபிஎஸ் கொஞ்சம் சைலன்ட் மோடிற்கு சென்றதும் ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

புயல்
பல விஷயங்களை மனதில் வைத்து இபிஎஸ் இப்படி அமைதியாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். கட்சியில் சில விஷயங்கள் சரியாக இல்லை. சில தலைகளை உள்ளே கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, கவனத்தை திசை திருப்ப இபிஎஸ் விரும்பவில்லை என்கிறார்கள். அதாவது கட்சிக்குள் இருக்கும் சில புகைச்சல்களை முதலில் முடிவிற்கு கொண்டு வரலாம்.. பின் அரசை கேள்வி கேட்கலாம் என்று இபிஎஸ் நினைப்பதாக தெரிகிறது.

என்ன பிரச்சனை
முக்கியமாக கட்சியில் எம்எல்ஏக்கள் மீது தனக்கு இருக்கும் கண்ட்ரோல் போய்விட கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறார். ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில சம்பவங்கள் தனக்கு எதிராக இருப்பதாக அவர் கருதுகிறார். முக்கியமாக ஓபிஎஸ்ஸின் அறிக்கை யுத்தமும், சசிகலாவின் சில சமீபத்திய மூவ்களும் தனக்கு எதிராக பின்னப்படும் வலை என்று இபிஎஸ் கருதுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இதனால்தான் தற்போது ஆளும் கட்சி மீது புகார்களை வைத்துக்கொண்டு இருக்காமல், கட்சிக்குள் காய்களை நகர்த்தி வருவதில் அவர் பிசியாக இருக்கிறார் என்கிறார்கள்.

பேச்சு அடிபடுகிறது
முதலில் கட்சியில் கட்டுப்பாட்டை உறுதியாக நிலைநிறுத்துவோம் என்பதில் இபிஎஸ் தீர்க்கமாக இருக்கிறார். ஏற்கனவே பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால், மீதம் உள்ளவர்களையும் தன் பக்கம் இழுக்கும் முனைப்பில் இருக்கிறார். இதனால்தான் இபிஎஸ் எதிர்கட்சித் தலைவர் ஆன பின்பும் கூட பெரிதாக ஆக்டிவாக இல்லாமல், அமைதியாக முக்கிய மூவ்களை செய்து வருகிறார் என்கிறார்கள்.. அடிக்க போகும் புயலுக்கு முன்பான அமைதிதான் இது என்கிறார்கள்.
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
செலவுக்கு ஒரு "25C" தாங்க.. போன் போட்ட வாசனிடம் கறார் காட்டிய எடப்பாடி! பாஜகவை கைகாட்டிய அதிமுக -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications