அபிஷேக் கிளம்பிவிடுவார்... நிரூப் சொன்னது சரிதானா??
சென்னை: எலிமினேஷன் வந்ததும் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆவார்கள் என்று போட்டியாளர்களுக்குள்ளே போட்டி ஆரம்பித்து விட்டது.
குருப்பீஸம் தொடங்கி விட்டார்களா என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் போது நிரூப் கொளுத்தி போட்டிருக்கும் தீப்பொறி காட்டுத்தீயாக மாறிவிட்டது.
இவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என்று வெளியே இருந்து ரிவ்யூ எடுத்துக் கொண்டிருந்த அபிஷேக்குக்கே இப்போ இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸின் வெற்றி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் பெருமளவில் வெற்றி பெற்று விடுகிறது. அதுவும் அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் பலர் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலவிதமாக பேசிக்கொண்டிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கியதும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அது ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்தே தெரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வார இறுதியிலும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கி வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

முதல் வார எலிமினேஷன்
இந்த சீசனில் முதல் எலிமினேஷன் தொடங்கியிருக்கும் நிலையில் இதில் 15 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுவும் 8 போட்டியாளர்கள் அதிகமான ஓட்டுகளை பெற்று இருக்கின்றனர். இதில் யார் கடைசி வரைக்கும் எந்த நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று ரசிகர்களும் சரி, போட்டியாளர்களும் சரி ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களுக்கு ஓட்டளிக்காமல் தங்களுடைய கோபத்தையும் வெளிக்காட்டி வருவார்கள். அது போல பலருக்கும் பிடிக்காத போட்டியாளர்களின் லிஸ்டில் அபிஷேக் பெயரும் இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்களின் கருத்து
முதல் வார எலிமினேஷன் லிஸ்டில் அபிஷேக்கின் பெயர் இருப்பதால் எப்படியும் இவரை வெளியேற்றி விடுங்கள் என்று நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது அவர் அந்த அளவிற்கு என்னதான் செய்துவிட்டார், எதற்காக அவர் மீது இவ்வளவு வன்மம் என்று பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் யாருடைய ஆசை நிறைவேறும் என்று பொருத்து இருந்து பார்த்தால் தெரியும் .

நிரூப் பற்ற வைத்த நெருப்பு
முதல் வார எலிமினேஷனில் யார் வெளியே செல்வார்கள் என்று தான் தற்போது போட்டியாளர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் ஜாலியாகவும், கலகலப்பாகவும் போய்க்கொண்டிருந்த இந்த சீசன் தற்போது முதல் வாரத்தில் எலிமினேஷன் வந்ததும் கொஞ்சம் பொறாமை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் அபிஷேக், நிரூப், பிரியங்கா மூவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நிரூப், அபிஷேக்கை பார்த்து இவன் எப்படியும் கிளம்பி விடுவான் என்று பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications