
எந்த உறவும் எங்களுக்கு உதவவில்லை..என் மனைவியால் குடும்பமே கண்கலங்கி... மனம் திறந்த சினேகன்
சென்னை: சினேகன் தன்னுடைய மனைவியை குறித்து மனம் திறந்து பேசி இருப்பது ரசிகர்களுக்கு பீலிங்கை கொடுத்துள்ளது.
திருமணத்தின் போது அவர் பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
தன் மனைவியை நினைத்து வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கி வருகிறார்கள் என்று பெருமையோடு கூறியுள்ளார்.
காதலே பொறாமை கொள்ளும் காதல்...லைவ்வில் சினேகன், கன்னிகா செய்த செயல்

வெளிச்சம் கொடுத்த பிக் பாஸ்
கவிஞர் சினேகன் என்று சொன்னால் பலருக்கும் தெரியும் ஆனால் இவர்தான் சினேகன் என்று சொன்னால் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் தான் வெளி உலகத்துக்கு இருந்து வந்த சினேகனை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைய வைத்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான கேரக்டர் மற்றும் சக போட்டியாளர்கள் இடம் பழகும் பழக்கத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து வந்தனர். ஒருசில நெட்டிசன்கள் இவரை குறை கூறியும் வந்தனர்.

மனைவியின் உறுதுணை
எப்போதுமே தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு செவி சாய்க்காமல் இருந்துவரும் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் கிடைத்ததாம். ஆனாலும் தன்னுடைய காதல் மனைவியின் சப்போட்டால் இவர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும் போதே இவருடைய காதல் பலருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அதை அப்போது அவர் வெளிப்படையாக பேசவில்லை.

உறுதியான காதல்
சினேகன் குடும்பம் பெரிய குடும்பமாக இருந்தாலும் அவருடைய அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அவர் அவருடைய குடும்ப வீட்டிற்குள் செல்வதே இல்லை. என்றாலும் தன்னுடைய தந்தையை மட்டுமே பார்த்துவிட்டு பல நேரங்களில் வந்துள்ளார். குடும்ப ஆதரவு எதுவும் இல்லாமல் தன்னுடைய சுய உழைப்பினால் தான் இவர் மேலே வந்துள்ளார். அதுபோலத்தான் கன்னிகா ரவியின் வீட்டிலும் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருசேர கஷ்டங்களை மட்டுமல்லாமல் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதால் தான் இவர்களுடைய காதல் இப்ப வரைக்கும் யாராலும் அசைக்க முடியாத வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கண்கலங்கி போன குடும்பம்
திருமணத்தின் போது எந்த உறவுகளும் கைகொடுக்கவில்லை. எந்த வேலைகளையும் செய்யவில்லை என்றாலும் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய குடும்பத்திற்கு கன்னிகா ரவியை மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். கன்னிகா அனைத்து உறவினர்களிடமும் முறை சொல்லி பேசுவதை பார்க்கும் போது அவர்களுக்கு கண் கலங்கி போய் இருக்கிறதாம். நாங்கள் பார்த்திருந்தால் கூட இந்த மாதிரி ஒரு பெண் உனக்கு கிடைத்திருக்காது என்று அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று சினேகன் கூறியிருக்கிறார்.