பழைய சோறு சாப்பிடுங்க உடம்புக்கு நல்லது.. பழைய சீரியல் பாருங்க.. மனசுக்கு ரொம்ப நல்லது பாஸ்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெட்டியா இருந்தாலே.. பொழுது போகணுமேன்னு மனசு எதையாவது தேடுவது இயல்புதான்.. அதுவும் ரொம்ப வெட்டியா இருப்பவர்களுக்கு கிடைத்துள்ள வரம்தான் இந்த டிவி சீரியல்கள். அதற்காக சீரியல்களை குறைச்சு மதிப்பிட்டு விடாதீங்கப்பு.. சூப்பரான முத்துக்களும் ஆங்காங்கே கொட்டித்தான் கிடக்கு.

விடாமல் சீரியல் பாக்குறியே... உனக்கு என்ன மூளை மழுங்கிப் போச்சான்னு கேட்டவர்களை நாம பார்த்திருக்கோம்.. ஏன் நாமளே கூட அந்த குரூப்பில்தான் ஒரு ஓரமாக குந்தியிருந்திருப்போம்.. ஆனா பாருங்க.. காலம் நம்மளையும் டிவி சீரியல் பார்க்க வச்சு டண்டணக்கா டான்ஸ் ஆடும்போதுதான்.. நமக்கும் அந்த சுகம் புலப்படுது!

என்னதான் சொல்லுங்க.. மசால் வடை மசால் வடைதாய்யா.. மன்னிக்கவும்... டிவி சீரியல் டிவி சீரியல்தான்.. அதுவும் இந்த பழைய டிவி சீரியல்கள் இருக்கே.. இப்ப உள்ள மாதிரி இல்லைங்க.. பார்க்கவே சுகமா இருக்கு.. வித்தியாசமா இருக்கு. அதையெல்லாம் அனுபவிச்சுப் பார்த்து புல்லரிச்சுப் போனாதான் உணர புரியும்.

பழைய சீரியல்களின் ரீவிசிட்

பழைய சீரியல்களின் ரீவிசிட்

இன்னிக்கு பல சானல்களிலும் பழைய சீரியல்களை எடுத்து போட்டு அவங்களே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இரட்டை லாபம் இருக்கு.. புது சீரியல்களை அதிமாக போட வேண்டிய கட்டாயத்தை தளர்த்திக்கலாம்.. எல்லாம் இந்த கொரோனா புண்ணியத்தால் புது சீரியல்களுக்கு பலவிதமாக ஏற்பட்ட சிக்கல்கள் . ஸோ பழைய சீரியல்களை எடுத்து விட்டு ஒரு குரூப் ஓடிக் கொண்டிருக்கு. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் இல்லையா.. ஸோ, சன் டிவியை மட்டும் இன்னிக்கு சாம்பிளுக்கு எடுத்துப்போம்.

முதல் சீரியல் செல்வி

முதல் சீரியல் செல்வி

காலைல 8.30 மணிக்கெல்லாம் கடையை திறந்து வச்சுடுது இந்த சன் டிவி. "செல்வி"யில் ஆரம்பித்து கல்யாணத்தில் போய் முடிக்கிறார்கள்.. அதாவது "மெட்டி ஒலி". செம "பேக்கிங்"கா இருக்கு.. ஒன்னுக்கு ஒன்னு சளைக்காத ஓல்டு மெமரீஸ்தான் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். செல்வி, உதிரிப் பூக்கள், வம்சம், சித்தி 2 (இது லைட்டா மொக்கையாகிப் போன சீரியல் என்பதால் பழசுடன் சேர்த்து விட்டார்களோ என்னவோ), அத்திப்பூக்கள், நந்தினி, மகராசி, திருமகள், மெட்டி ஒலி. இப்படி போகுதுங்க ஆர்டர். ஒன்னு விடாம வரிசையா பார்த்தீங்கன்னு வைங்க.. கண்ணெல்லாம் "பவர்" ஏறி, ஆளே "வைப்ரன்ட்" ஆகி, ஒரு மார்க்கமாக மாறி.. மண்டையெல்லாம் நல்லா பாலிஷ் ஆயிடும்!

இதெல்லாம் மிஸ் பண்ணக் கூடாத சீரியல்கள்

இதெல்லாம் மிஸ் பண்ணக் கூடாத சீரியல்கள்

உதிரிப்பூக்கள், அத்திப்பூக்கள்.. இந்த இரண்டு சீரியல்களும் "மஸ்ட்" பார்க்க வேண்டிய சீரியல்கள். உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் நல்லா கலந்து கரைச்சு பிசைஞ்சு கையில் கொடுப்பார்கள். அதை பவ்யமாக வாங்கி கண்ணீர் விட்டுக் கதறி அழ வேண்டிய வேலை மட்டுமே நமக்கு.. ! என்ன , இடை இடையே விளம்பரம் போட்டு உணர்ச்சிகளை அவ்வப்போது அடக்கி வைத்து விடுகிறார்கள். அதான் பழைய சீரியலாச்சே.. விளம்பரமே இல்லாமல், கேப்பே விடாமல் போட்டுத் தாக்கலாமே எஜமான்.. நல்லா குமுறிக் குமுறி அழுவோம்ல!

எத்தாத்தண்டி பாம்பு

எத்தாத்தண்டி பாம்பு

இதெல்லாம் என்னங்க சீரியல்.. இந்த நந்தினி இருக்கே நந்தினி.. ஆத்தாடி.. எழுதும்போதே பயந்து வரும்.. அந்த திரில் காட்சிகளை பார்த்தால். நந்தினியில் வந்த பாம்பைப் பார்க்கவே 2 கண் பத்தாது.. கோடி கண்ணை பிக்ஸ் பண்ணி வச்சிருக்கணும்.. அப்படி தத்ரூபம்.. எத்தாத்தண்டி பாம்பு தெரியுமா.. கிராபிக்ஸ் தம்பி சூப்பராக "படம்" எடுத்திருக்காப்ள.. பாம்போட ஸ்டார்ட்டிங் மட்டுமல்ல.. பினிஷிங்கும் கூட பியூட்டிஃபுல்லாக இருக்கு.. கண்ணெல்லாம் கூட அடிக்குது பயபுள்ளை.. கை தட்டி ரசிச்சுப் பாராட்டலாம். அதை விட பிரமாதம் பெண் வேடம் போட்ட ரியாஸும்.. மங்களகர மஞ்சள் முக குஷ்புவும்!

ரெபரன்ஸ் புக்கே இந்த லுக்குதான்

ரெபரன்ஸ் புக்கே இந்த லுக்குதான்

ரியாஸ் கான் கிட்ட காஞ்சனா பேய் "Beg" எடுக்கணும்.. அவ்ளோ ருத்ரம்.. அசால்ட்! எனக்கு என்னவோ டவுட்டா இருக்கு.. அனேகமாக காஞ்சனாவில் வந்த சரத்குமார் "லுக்"குக்கு.. நந்தினி சீரியல் ரியாஸ்கான் "லுக்" தான் பெரபரன்ஸ் "புக்"கா இருந்திருக்கும் போல.. இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லணும்.. அப்பத்தான் நீங்க இதைப் பார்க்கப் போகும்போது நினைவுகூர்ந்து சிலாகித்து சிலிர்ப்பீர்கள். பிறகு, குஷ்புவுக்கு இந்த சீரியலில் காஸ்ட்யூம் எல்லாம் செம பொருத்தம்.. எந்தக் கடையில் எடுத்தாய்ங்கேன்னு தெரியலை.. நல்லாருக்கு.. கடை பேரையும் கார்டுல போடுங்கப்பா.. தீபாவளிக்கு வாங்குவோம்ல.!

வம்சத்தை மறந்துடாதீங்க மக்கா!

வம்சத்தை மறந்துடாதீங்க மக்கா!

அட வம்சத்தை மறந்துட்டோமோ.. சாப்பிட்ட சாப்பாட்டின் வாசத்தை கூட மறக்கலாம்.. வம்சம் ரம்யா கிருஷ்ணனை மறக்க முடியுமோ.. மறக்கவும் கூடாத அம்சமான நடிப்பாச்சே.. அந்த வம்சத்தையும் காலைல பார்த்துருங்க ஒரு வாட்டி.. நாலு வருஷம் விடாமல் நறுக்கென ஓடி வாசகர்களை கலகலக்க வைத்த சீரியல். ஆரம்பத்தில் இந்த சீரியல் நல்லாதான் போச்சு.. ஆனால் பின்னாடி ஏகப்பட்ட ஜிகினா வேலைகளை சேர்த்து சேர்த்து கடுப்பில் மூழ்கடித்து விட்டார்கள். ஆனாலும் ஒரு எபிசோட் கூட விடாமல் பார்த்துப் பார்த்து பொழுதை வெட்டித் தள்ளிய வம்சமாச்சே நம்மோட மாயாண்டி குடும்பத்தார்.. அதாவது டிவி பார்க்கும் குடும்பத்தார்கள்!

மெட்டி ஒலியா இல்லை வெட்டி ஒலியா!

மெட்டி ஒலியா இல்லை வெட்டி ஒலியா!

ஓகே ஓரளவு கவர் பண்ணிட்டோம்.. கடைசியா வெட்டி ஒலி.. ஸாரி.. மெட்டி ஒலி.. காதுக்குள்ள வந்து குந்த வைத்து "அம்மி அம்மி அம்மி"ன்னு கும்மி எடுத்த நித்யஸ்ரீ மகாதேவனைத்தான் மறக்க முடியுமா.. இல்லை சோகத்தை துண்டாக்கி தோளில் போட்டு சுமந்தே சோர்வடைந்து போன சிதம்பரத்தை மறக்க முடியுமா.. இல்லை.. வாயில் வசம்பை வைத்து தேய்க்க என்று சாபம் விடும் அளவுக்கு எப்பப் பார்த்தாலும் கரித்துக் கொட்டிய அந்த ராஜேஸ்வரியை மறக்க முடியுமா.. புல்லானாலும் ஹஸ்பென்ட்.. பூரிக் கட்டையால் அடித்தாலும் புருஷன் என்று கொஞ்சம் ஓவராகவே பொறுத்துப் போன சரோஜாவைத்தான் மறக்க முடியுமா.. அட நம்ம தனம்.. போஸு.. அடடா... திண்ணையில் உட்கார்ந்து இதையெல்லாம் எண்ணிப் பார்த்தால்.. ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்ய்யா.. மாப்ளை!

இதெல்லாம் ரொம்ப பீல் பண்ணி எழுதிட்டு டிவியைப் பார்த்தா.. "மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் இருக்கு.. கணக்கைப் பண்ணுங்க கன்னிப் பொண்ணிருக்கு" ன்னு ஒரு பாட்டு.. பார்த்தா.. "கண்ணான கண்ணே" சீரியலுக்கான புரோமோவாம்.. அடேய்"டி"களா.. ஆளை விடுங்கடா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+