• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Nayagi Serial: அனன்யாவுக்கு மட்டும் இப்படி இனா வானா மாப்பிள்ளை கிடைக்கிறாங்களே...!

|

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் செய்யக் கூடாத தப்பை எல்லாம் செய்த அனன்யாவை இன்னும் ஒருத்தன் சின்ஸியரா லவ் பண்ணிக்கிட்டு இருக்கானாம். அவனுக்கு அனன்யாவை கல்யாணம் செய்து வைக்கப் போறாங்களாம்.

தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு வில்லி கதாபாத்திரம் திருந்தணும்னு நினைச்சால் இவங்க இஷ்டத்துக்கு கதையை வளைச்சு வளைச்சு எழுதிக்குவாங்க. ஆனால், இது இக்கதையைப் பார்த்து இப்படியும் நாம செய்யலாமா என்று யோசிக்கும் சீரியல் ஆர்வலர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லுவாங்க?

கொஞ்ச நஞ்ச தப்பு இல்லைங்க.. உலகத்தில் ஒட்டுமொத்தமா என்னென்ன தப்பு இருக்குமோ அத்தனையும் செய்துவிட்ட அனன்யா தான் திருந்த மாட்டாளாம். இவங்க ஒரு கல்யாணத்தை செய்து வச்சு திருத்துவாங்களாம்.

கதையை இஷ்டத்துக்கு வளைச்சு

கதையை இஷ்டத்துக்கு வளைச்சு

நாயகி சீரியலில் அனன்யாவை படிக்கும் போதிலிருந்தே காதலிப்பவன் கடந்த மூன்று வருட கதையில் ஒரு எபிசோடில் கூட வரவில்லை. இப்படி காதலித்துக் கொண்டு இருப்பவன் எதேச்சையா திடீர்னு அனன்யாவைப் பார்த்து இன்னும் அவளை காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கானாம்... அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம். அமெரிக்காவில் படிக்கும்போது அனன்யாவை ஒன் சைடா காதலிச்சுக்கிட்டு இருந்தானாம். கதையில் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவ்வப்போது டர்னிங் பாயிண்ட் கொண்டு வருவது என்பது இதுதானா? இவங்க இஷ்டத்துக்கு வளைச்சுக்குவது மக்களின் எதிர்பார்ப்பு இல்லை.

திரு... திரு பைத்தியம்

திரு... திரு பைத்தியம்

படித்த பெண்ணான அனன்யா, திரு திருன்னு திரு பைத்தியம் பிடித்து அலைகிறாள். தாலி கட்டு தாலி கட்டுன்னு அவனை கட்டாயப்படுத்தி கோயிலுக்கு அழைச்சுட்டு போயி பிளாக் மெயில் செய்கிறாள். ஏற்கனவே ஆயிரத்தெட்டு கதைகள் இப்படித்தான் சீரியல்களில் இருக்கு. இதில் இப்படி ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும் ஒருவன் மீது பைத்தியம் பிடிச்சு அலைந்தால், இரண்டாவது கல்யாணம், இரண்டாவது தாலி என்பதெல்லாம் பார்க்கும் சில பெண்களுக்கு ரொம்ப சாதாரணமாகி விடாதா? இதை எல்லாம் காண்பித்துவிட்டு, இப்போது அனன்யாவுக்கு காதலித்த பையன் இருக்கிறானாம். அவனுக்கு அனன்யாவை கல்யாணம் செய்து வைக்கிறார்களாம்.

செய்த தவறுகள்

செய்த தவறுகள்

அனன்யா செய்த தவறுகள் என்று பார்க்கும்போது திருவுக்கே தெரியாமல் அவனது உயிரணுக்களை எடுத்து வச்சு தான் அதை வைத்து செயற்கை முறையில் கர்ப்பமாகிறாள். அந்த குழந்தையையும் ஜெயிலில் பெற்று வளர்த்து, ஐந்து வருடம் சிறைத் தண்டனையும் அனுபவிக்கிறாள். வெளியில் வந்தும் ஆனந்தியை பழிவாங்கி திருவை தான் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துகொள்ள பல தவறுகளை செய்கிறாள். இதெல்லாம் காண்பித்தது காண்பித்ததுதானே? திடீரென்று இன்னொரு கல்யாணம் செய்து வைத்தால் அவள் திருந்திவிடுகிறாள் என்பது இருக்கட்டும். முதலில் இப்படிப்பட்ட தவறுகளை வேலை மெனக்கெட்டு செய்யும் பெண்களை காண்பியுங்கள்.

ஃபர்ஸ்ட் சானல் செகண்ட் சானல்

ஃபர்ஸ்ட் சானல் செகண்ட் சானல்

இந்த நிலையில், அனன்யா திருவிடம் பேசும்போது உன்னோட செகண்ட் சானல் பேசறேன்..உன்னோட ஃபர்ஸ்ட் சானல்என்ன சொல்றா? நீ எனக்கு தெரிஞ்சே உன்னோட ஃபர்ஸ்ட் சானல் கூட பேசலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்று டயலாக் பேசுவது எல்லாமே சகிக்கலை. ஆனால், இந்த சீரியல்தான் ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ஆனா பாருங்க... மக்களை தவறா கணிச்சு இருக்கீங்க!

கதை அல்ல ஃ பிகர்

கதை அல்ல ஃ பிகர்

நாயகி சீரியல் ரேட்டிங்கில் நம்பர் ஒன்னில் இருப்பது உங்கள் கதைக்காக என்று நினைத்து விடாதீர்கள். அனன்யா, ஆனந்தி இருவருமே நல்ல ஃபிகர். இதனால் பல ஆண்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள். இதனால்தான் ரேட்டிங்கில் நம்பர் ஒன்னில் இருக்கிறது. இதை முதலில் அறிந்துக்கொண்டு, கதையை நல்ல போக்கில் கொண்டு செல்லுங்கள். இந்த நேரத்தில் மக்களை கவர எத்தனை நல்ல விஷயங்களை சொல்லலாம்...அநியாயமாக நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

 
 
 
English summary
Ananya, an educated woman, is mad at Mr. Thirunnu. forced him to go to the temple and go black mail. Thousands of stories already in the series. If you get mad at someone who is already married, is it not normal for some women to see a second marriage and a second tali?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X