பாடல் வெளியீட்டு விழா பேச்சுக்கு... பட வெளியீட்டில் பரிகாரம் தேடிய அஸ்வின்!!???
சென்னை: அஸ்வின் தன்னுடைய திரைப்பட வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Recommended Video
மீண்டும் மைக்கை பிடித்ததும் என்ன சொல்லப் போகிறாரோ என்று பலரும் ஆர்வத்துடன் அவருடைய பேச்சைக் கேட்டு வருகின்றனர்.

ரொம்பவே மாறி விட்டார்
முழுவதுமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பிருந்த அஸ்வினாக மாறி..."என்ன சொல்லப் போகிறாய்" பட வெளியீட்டில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதுதான் உண்மையான அஸ்வினா..!!?? இல்லை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியது உண்மையான அஸ்வினா..!!??என்று வீடியோவை பார்த்தவர்கள் குழம்பும் அளவிற்கு குப்புறவே.. விழுந்து... விட்டார்..!!

தெளிவு வந்துவிட்டதா??
ஒரு மனிதனுக்கு நிம்மதியே தூக்கத்தில் தான்... ஆனால் அதே தூக்கத்தால் அஸ்வின் தன் நிம்மதியை தொலைத்து விட்டு, கொஞ்ச நாட்களாக தன் எதிர்காலத்தை குறித்த கேள்விக்குறியிலே... இருந்து வந்திருப்பார்.அந்த அளவிற்கு நெட்டிசன்கள் இவரை பாடாய் படுத்தி விட்டனர் .பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய பேச்சுக்கள் எந்த தரப்பினராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்ததால் அதற்கான எதிர்வினை பட வெளியீட்டை சந்தேகமாக்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் எல்லாம் முடிந்து தற்போது படம் வெளியான பின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் அஸ்வின்.

பவ்யமான பேச்சு
இன்று பட வெளியீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அஸ்வின்..' தனக்கு இந்த பட வெளியீட்டு கொண்டாட்டங்கள் எல்லாம் புதிது என்றும், நானும் மற்றவர்களைப் போல் சாதாரண ஆள் தான் என்று கூறியுள்ளார்.இதை பார்த்த இணையவாசிகள் நீங்க திருந்திட்டீங்கனு நம்புறோம், அதுக்காக ரொம்ப நடிக்காதீங்க என்றும், உங்களை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூக வலைதளங்கள் தான் உங்கள் தலைகணம் ஏறிய பேச்சால் ஓவர் நைட்டில் தூக்கி எறிந்தது.. இதை புரிந்து கொண்டு இந்த அடக்கத்தை அப்படியே மெயிண்டன் பண்ணுங்க... என்று பலர் இவருக்கு அறிவுரை வழங்கி இன்னும் பல உயரம் காண வாழ்த்தி வருகின்றனர்.

பலன் கிடைக்குமா?
பாடல் வெளியீட்டு விழா வில் பேசிய பேச்சிற்கு பரிகாரமாக பட வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்திக்கொண்ட அஸ்வின், அதில் கொஞ்சம் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு மிடில் கிளாஸ் பையனாக இருந்து தான் ஹீரோவாக உயர்ந்துள்ளதை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அடக்கமாக கூறி அனுதாபத்தை தேடிக்கொண்டார். தூங்கிக்கொண்டிருந்த அஸ்வின் எழுந்து விட்டார் என்பதை அறிந்து இனிமேலாவது நெட்டிசன்கள் இவரை தங்களது வலையில் இருந்து விடுவித்து.. ஆதரவளிப்பார்களா..!!?? என்று இவர்கள் சந்தேகங்களை கிளப்பி இருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications