தான் ஏமாந்த தருணத்தை பார்த்து அதிர்ந்த ராஜு...உச்சுக் கொட்டும் ரசிகர்கள்
சென்னை: நம்ப வச்சு ஏமாத்துறது இதுதானா என்று தற்போது பிரியங்காவின் செயலை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தான் நடித்து வாங்கிய பட்டத்தை இப்படி ஒன்றுமில்லாமல் செய்து விட்டாரே என்று அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார் ராஜூ.
ராஜுவின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி அவரை ஏமாற்றிய பிரியங்காவின் சதியை புரிந்து கொண்ட ராஜூ பேச வார்த்தையின்றி திகைத்துப் போய் இருக்கிறார்.

அதிர்ச்சி கொடுத்த குறும்படம்
டாஸ்க் என்று வந்துவிட்டால் நாங்க எல்லாம் வேற லெவல் என்பது தற்போது பிரியங்கா நிரூபித்திருக்கிறார். இவருடைய செயலைப் புரிந்து கொள்ளாமல் வெள்ளந்தியாக இருந்தாலும் மதுமிதா மற்றும் ராஜூ தாங்கள் ஏமாந்ததை நினைத்து பேச வார்த்தை இன்றி தவித்து வருகிறார்கள். எப்படி எல்லாம் நமக்கு பிளான் போட்டிருக்கிறார்கள் என்பதை ஒரு குறும்படத்தில் பார்த்ததும் இவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

வேற லெவல் டாஸ்க்
போட்டியாளர்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்பதை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்குத்து உடைய டாஸ்க் வைத்து அனைவருக்கும் நிரூபித்து விட்டது. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு மறைமுகமான டாஸ்க் இல்லாததால் அனைத்து போட்டியாளர்களும் சகஜமாகவும், வெகுளிதனமாகவும் இருந்து வந்தனர். ஆனால் முதல்முறையாக ராஜு மற்றும் மதுவிற்கு எதிராக பிக் பாஸால் உருவாக்கப்பட்ட மறைமுகமான டாஸ்கில் இவர்கள் இருவரும் ஏமாந்ததை பார்த்து சகபோட்டியாளர்களும் அலர்ட் ஆகி விட்டனர்.

இப்படி ஏமாந்து விட்டார்களே
இனி இப்படி எல்லாம் ஒரு டாஸ்க் வரும் என்பதை தெரிந்து கொண்டு போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தவா?? அல்லது கருத்து வேறுபாடுகள் உண்டு செய்யவா??என்று தெரியாவிட்டாலும் பிக்பாஸ் தரமான சம்பவத்தை ஏற்படுத்திவிட்டது. சினிமாசினிமா டாஸ்க்கில் அனைவரின் மனதை கவர்ந்த போட்டியாளராக ராஜு மற்றும் மதுமிதா இருவரும் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் இருவருக்கும் சிறப்பான சலுகை அளிக்கப்படும் என்று பிக்பாஸ் கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று இனி ராஜு மற்றும் மதுவுக்கு அப்படி செய்ய முடியாது என்று பிக்பாஸ் கூறியதும் அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். என்ன இப்படி சொல்கிறார்கள் என்று தான்.

அதிர்ச்சியில் ராஜு
ஏற்கனவே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி அன்று பிரியங்கா மற்றும் தாமரைச்செல்வி இருவரையும் அழைத்து பிக்பாஸ் ரகசியம் கொடுத்திருந்தது. அதில் பிக்பாஸ் கூறிய 4 டாஸ்க்களையும் ராஜு மற்றும் மது இவர்கள் இருவரும் செய்ய வைத்து விட்டால் பிரியங்கா மற்றும் தாமரை செல்வி போட்டியில் வெற்றி பெற்று விடுவீர்கள் என்று கூறியிருந்தது. அதன்படியே பிரியங்காவும், தாமரைசெல்வியும், ராஜு மட்டம் மதுவை ஏமாற்றிவிட்டனர். இதனை குறும்படமாக போட்டு அனைவருக்கும் பிக்பாஸ் காட்டிவிட்டது. இதைப்பார்த்து ராஜு வெளியே சொல்ல முடியாத அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். அதுவும் அவருடைய எக்ஸ்பிரஷன் வேற லெவல் வைரலாகி வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications