Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிரூப்பை சேர்த்துக் கொள்ள மறுத்த பிரியங்கா...இனி தனியாகவே விளையாடுவதாக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியங்கா இப்போதான் சரியான முடிவு எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஒருவழியாக பிரியங்கா தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து விட்டார் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அபிஷேக் வெளியே சென்றதும் பிரியங்காவிற்கு ஞான உதயம் வந்துவிட்டது போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விளையாட்டு மாறி போச்சு

விளையாட்டு மாறி போச்சு

ஆரம்பத்தில் பிரியங்கா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சுய கேரக்டரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இவருடைய கலகலப்பும் அடுத்தவர்களை மகிழ்விக்கும் குணமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போதுமே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் விளையாட்டு வேறுவிதமாக போய்விட்டது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

புரிந்துகொண்ட பிரியங்கா

புரிந்துகொண்ட பிரியங்கா

ஆரம்பத்தில் இருந்த போட்டியாளர் உடன் கூட்டணி வைக்காமல் தன்னுடைய தன்னிச்சையான முடிவுகளால் ஜொலித்து வந்த இவர், நாட்கள் செல்ல செல்ல அபிஷேக் மற்றும் நிரூப்புடன் கூட்டு சேர்ந்து விட்டார். அதற்குப் பிறகு இவர்கள் மூவரும் செய்யும் செயல்கள் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. அதுவும் இதுவரைக்கும் இருந்த நல்ல பெயர் இவருக்கு அப்படியே சரிய தொடங்கிவிட்டது.

மனம் மாறிய தருணம்

மனம் மாறிய தருணம்

நல்லவேளையாக அந்த நேரத்தில் அபிஷேக் இவரை விடவும் அதிகமாக ஆட்டம் போட்டு விட்டார் என்று அவரை ரசிகர்கள் வெளியே தூக்கி விட்டார்கள். இதனை புரிந்து கொண்ட பிரியங்கா, அந்த நேரத்தில் நிரூம்பின் சுய ரூபத்தையும் புரிந்துகொண்டார். காயின் டாஸ்க்கில் அவர் நடந்து கொண்டது பிரியங்காவை ரொம்பவே பாதித்து இருக்கிறது. ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு பிரியங்கா அவரிடம் பழையபடி நெருக்கத்தைக் காட்டாமல் தவிர்த்து வருகிறார்.

திடீர் முடிவு

திடீர் முடிவு

ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் இதையேதான் சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிரியங்கா அதை செய்ய ஆரம்பித்ததும் மீண்டும் பிரியங்காவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா தனியாக அமர்ந்து கொண்டு கதை எழுதிக் கொண்டிருக்கும் போது, நானும் வருகிறேன் என்று அவருடைய விளையாட்டில் பங்கு எடுத்துக் கொள்ள விரும்பிய நிரூப்பை வேண்டாம் இனி நான் தனியாகவே விளையாடி விடுகிறேன் என்று இவர் கூறியது தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. தற்போது அதைப் பற்றி தான் ரசிகர்கள் அதிகமாக மீன்ஸ்களையும் போட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+