முகத்துக்கு நேராக ராஜூவிடம் கேள்வி கேட்ட பிரியங்கா..பாவனியிடம் பற்ற வைக்கலாமா??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவின் செய்கையை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அந்தப்பக்கம் ஒரு பேச்சு இந்தப்பக்கம் ஒரு பேச்சு என்று இப்படி பேசலாமா என பிரியங்காவிற்கு அட்வைஸ் மழை பொழிகிறது.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் பிரியங்கா என்று அவருடைய ரசிகர்களே சிலர் பீல் பண்ணி வருகின்றனர்.

அதிரவைத்த ராஜூவின் செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில செயல்கள் சாதாரணமாக நடந்தது போல இருந்தாலும் பூதாகரமாக வெடித்து விடும். அந்த மாதிரி தான் தற்போதைய சீசனில் கூட இதுவரைக்கும் இல்லாத வகையில் ராஜு செய்த செயல் பலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதுவரைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் ராஜு பார்த்து பார்த்து விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் நேற்றைய டாஸ்க்கில் இவர் விளையாடியது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்துள்ளது. இவரிடம் இருந்து இந்த மாதிரி ஒரு செயல்பாடு எதிர்பார்க்காத ரசிகர்களால் இப்ப வரைக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருந்து வருகின்றனர்.

பாட்டிலோடு விளையாட்டு
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. இதுவரைக்கும் தன்னுடைய டைமிங் காமெடியால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வந்த ராஜு எதார்த்தமாக பேசிய வார்த்தை பலருடைய மனதையும் புண்படுத்தி விட்டது என்று கூறி வருகின்றனர். ட்ரூ ஆர் ட்ருத் விளையாடிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாட்டில் யாரை குறிக்கிறதோ அவர்களிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது

என்ன வார்த்தை கேட்டு விட்டீங்க
அப்போது ராஜு சுற்றிய பாட்டில் அபிநயை பார்த்து நின்றது. இதனால் அபிநயிடம் ராஜு ட்ரூவா..ட்ரூத்தா என்று கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அபிநய் ட்ரூ என்று சொன்னதும், நீ பாவனியை லவ் பண்ணுகிறாயா என்று டக்கென்று கேட்டுவிட்டார். பாவனியை ஒவ்வொரு இடத்திலும் அசிங்கப்படுத்தி வருவதுதான் ராஜுவின் வேலை என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் நேரத்தில், இவருடைய இந்த கேள்வி அனைவரையும் அதிர வைத்து விட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் எதார்த்தமாக விளையாட்டுக்கு இப்படி ஒரு வார்த்தையை கேட்டு விட்டார் அவ்வளவுதான் என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர்.

கொளுத்திப் போட்ட பிரியங்கா
தான் செய்தது தவறு என்பதை புரிந்த ராஜு அதைப்பற்றி சக போட்டியாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். நான் சொன்னது தவறா?? சரியா?? என்று அதற்கு பிரியங்கா ராஜுவின் முகத்துக்கு நேராக நீ செய்தது தவறு. அபிநய் திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. பாவனி தனியாக இருக்கிறார் அதனால் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை வாரி வழங்கிவிட்டு பெட் ரூம் சென்றதும் பாவனி மற்றும் அபிநய் பேசிக்கொண்டிருக்கும்போது பாவனியிடம் ராஜு இந்த விஷயத்தை பேசி பெருசு பண்ணி கொண்டு இருக்கிறான். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் எப்போதும் போல இயல்பாக இருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன அந்தப் பக்கம், இந்தப் பக்கம் கொளுத்தி போடுறங்களா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications