ரசிகர்களுக்காக முதல்முறையாக வேண்டுகோளை நிறைவேற்றிய பிரியங்கா நல்கரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய பிரியங்கா நல்கரியை பார்த்து சந்தோஷத்தில் குதூகளிக்கின்றனர்.

மஞ்சக் காட்டு மைனாவாக இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து இன்ஸ்டாகிராமே கதிகலங்கி போய்விட்டதாமே.

பரம சுந்தரியாக மாறிய ரோஜா சீரியல் ரோஜாவுக்கு வாழ்த்துக்களை குவிப்பதற்காக வரிசைகட்டி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சேலையில் வந்த தேவதையா இது?

சேலையில் வந்த தேவதையா இது?

சேலையிலேயே பார்த்துவந்த சன் டிவியின் ரோஜா இப்போ தெருவில் மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போன ரசிகர்கள் கமெண்ட்களில் காதல் மழை பொழிகின்றனர். ரசிகர்களின் அன்பினை நன்றாக புரிந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் தற்போது கமெண்ட்களில் அர்ச்சனை செய்து வருகின்றனர். ரசிகர்களின் பல நாள் ஆசையை இவர் இப்போது நிறைவேற்றி விட்டார் என்று ஆனந்தக் கழிப்பில் இருக்கின்றனர். அப்படி என்னதான் ரசிகர்கள் இவரிடம் கேட்டார்கள் என்று பார்த்தால் இவரிடம் ஒரு வீடியோ போட சொல்லி கேட்டார்களாம், பிரியங்கா நல்கரியும் சம்மதம் சொல்லி பக்காவாக ஒரு ரீல்ஸ் வீடியோவில் ஆட்டம் போட்டு கலக்கி விட்டார்.

கலக்கும் பரம சுந்தரி

கலக்கும் பரம சுந்தரி

அடிக்கடி போட்டோ சூட்களை இவர் அதிகமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தாலும் தற்போது குத்தாட்டம் போட்டு பரம சுந்தரியாக இவர் வலம் வரும் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் ரோஜா சீரியல் எல்லாம் சும்மா, இப்படி கும்முன்னு வந்தாதான் பிரியங்காவுக்கு கிக். அதனால் இப்படியே வளம் வாங்க தலைவி என்று இவரை உசுப்பிவிட்டு வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மனதில் டக்கென்று பதிந்துவிடும் அந்த வரிசையில் ரோஜா சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் கதாநாயகியாக ரோஜா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரியை இளைஞர்கள் முதல் வீட்டுப்பெண்கள் வரை பலருக்கும் பிடித்திருக்கிறது.

புசுபுசு அழகி

புசுபுசு அழகி

இவர் சீரியல் நடிகையாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் செம்ம பிஸியாக இருந்து வருகிறார். ஆக்டிவாக இவர் போடும் போஸ்ட்களை பார்த்து அசந்து போன ரசிகர்கள் இவருக்கு ஃபேன்ஸாக மாறி விட்டனர். ஸ்லிம்மாக இருந்தால்தான் அழகு என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும்போது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை புசுபுசுவென்று நம்ம ரோஜா சீரியல் நடிகை மாதிரி இருந்தா நல்லா இருக்கும் என்று பலர் இவரை உதாரணம் காட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்து இவருடைய கேரக்டரை இவரே மிஞ்சி போயிருக்கிறார் .கன்னடத் திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து கொண்டிருந்த இவருக்கு முதன்முதலாக இந்த சீரியலில் வாய்ப்பு கிடைக்கும்போது இவரே ஆச்சரியத்தில் தான் இருந்திருக்கிறார்.

புருஷனுக்கு சார் மரியாதை

புருஷனுக்கு சார் மரியாதை

தமிழ் பேசத் தெரியாத நம்மால் தமிழ் சீரியலில் நடிக்க முடியுமா என்று குழம்பிப் போயிருந்த இவருக்கு ஆர்வமிருந்தால் எல்லாமே அப்படித்தான் என்று அவரே நிரூபித்திருக்கிறார். தற்போது தன்னுடைய அழகான கொஞ்சும் தமிழால் அனைவரையும் அசர வைத்து வருகிறார். இவர் ரோஜா சீரியலில் அர்ஜுன் சார் என்று அழைத்து பல நெட்டிசன்களின் வாயில் விழுந்து விட்டார். தொடர்ச்சியாக தற்போது பல சீரியல்களிலும் கணவனை சார் என்று அழைப்பதும், சின்னையா, பெரியய்யா என்று அழைப்பதும் பேஷனாக மாறிவிட்டது. இந்த நிலையில் இவரும் அதே போல பின்பற்றவே இவரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு வழியா ஆசை நிறைவேறிடிச்சி

ஒரு வழியா ஆசை நிறைவேறிடிச்சி

எது எப்படியோ இவர் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய சூட்டிங்கில் பிசி ஆகவும் ஜாலியாகவும் இருந்து கொண்டிருக்கிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோ சூட்டை ஆரம்பித்துவிடுகிறார். இவரே ஒரு யூடியூப் சேனல் வைத்திருப்பதால் அதிலும் இவர் எடுக்கும் போட்டோக்களை அப்லோட் செய்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இவர் செய்யும் சமையல் கலையும் அந்த சேனலில் ஒளிபரப்பாகி வலம் வருகிறது. விதவிதமாக இவர் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு இருந்தாலும், ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடவில்லை என்று இவருடைய ரசிகர்களின் மனதில் பெரிய கவலை இருந்துகொண்டிருக்கிறது. அதனை தீர்த்து விட்டதால் இவருடைய வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஒரு வழியா தங்களுடைய ஆசை நிறைவேறியதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம் ....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+