வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரோஜா கதாநாயகி...காரணம் என்ன தெரியுமா??
சென்னை: ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்ய தொடங்கி இருக்கும் பிரியங்கா நல்கரியை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
புசுபுசுவென இருக்கும் ரோஜா இனி ஜிவ்வென்று மாறிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

காலையில் தொடங்கிய உடற்பயிற்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் மூலமாக அணைத்துவீட்டு ரசிகர்களின் ரோஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்க நல்கரி தற்போது செய்த செயல் வைரலாக பரவி வருகிறது. காலை வேளையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோஸ் பார்த்ததும் ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விடுகிறார்கள். பல நாட்களுக்கு பிறகு ரோஜா இப்படி மாறி இருக்கிறார் என்று ரசிகர்கள் இவருக்கு மேலும் எனர்ஜி கூட்டி வருகின்றனர். ஏற்கனவே வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இனி இவரைப் பார்த்து பலர் மிரண்டு போகப் போகிறார்கள்.

பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்
இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகி போட்டிருக்கும் ரோஜா சீரியல் தான் சன் டிவியில் டி ஆர் பி யில் டாப் .இதில் ஒவ்வொரு ப்ரோமோவும் பல லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது .அதுமட்டுமில்லாமல் டீவியிலும் இந்த சீரியலை தவறவிடாமல் பெண்கள் பார்த்து வருகின்றனர் .வேலைக்கு செல்லும் இளைஞர்களும் கூட தங்களுடைய போன்களில் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.அந்த அளவிற்கு இந்த சீரியல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆகிவிட்டது.

எதிர்பார்க்காத ரசிகர்களின் அன்பு
தமிழில் முதன்முதலில் அறிமுகமான சீரியலில் இந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆவார் என்று அவருடைய ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவரும் இதனை எதிர்பார்க்கவில்லை. முதலில் தமிழ் சீரியலில் நடிப்பதற்கு ரொம்பவே பயப்பட்டுருக்கிறார். தமிழே தெரியாமல் எப்படி தமிழ் சீரியலில் நடிப்பது என்று நினைத்த இவர்தான் இப்போது, தமிழில் பேசியே தமிழ் இளைஞர்களை கவர்ந்து விட்டார். பொதுவாக நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதில் இவரும் ஒருவர்.

இனி வெள்ளித்திரையிலும் கலக்கல்
பிரியங்கா நல்கரி என்னும் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் சன் டிவியின் ரோஜா என்று சொன்னால் அனைவருக்கும் பரிச்சயம் தான். இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் சினிமா பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருப்பதால் உடலை குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் இவ்வளவு தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே முதல் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் வெள்ளித்திரை மூலமாகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள போகிறார் என்று இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications