இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிலா?? பிரியங்காவின் திடீர் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: தான் தொகுத்து வழங்கிய பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி மேடையில் முதன் முறையாக இந்திய சினிமாக்களின் ஜாம்பவான்களை மொத்தமாக பார்த்த விஜய் டிவி பிரியங்கா அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
போட்டோக்களில் அவரது ஃபேஸ் ரியாக்ஷனை பலர் கலாய்த்தாலும், அந்த போட்டோக்கள் அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் புது முயற்சி
இங்கிலீஷ்,ஹிந்தி,தெலுங்கு, என்று பல மொழிகளில் சர்ச்சைக்கு உள்ளானாலும், டி.ஆர்.பி யில் புதிய மைல் கல்லை படைத்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். தமிழில் இந்த நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்பும் உரிமையை பெற்ற விஜய் டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதில் பங்கு கொள்ளும் கண்டஸ்டன்டுகளை வைத்தே பல கண்டன்டுகளை எடுத்து பல வெரைட்டியான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

வியக்க வைத்த பிரியங்காவின் போஸ்ட்
தற்பொழுது கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட கண்டஸ்டன்டுகளை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவை நடத்திய விஜய் டிவி, அதன் வெற்றியை தொடர்ந்து அதே ரியாலிட்டி ஷோவை மீண்டும் பிபிஜோடி பார்ட் 2 என்று நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. பிபி ஜோடிகள் டு நிகழ்ச்சி இவ்வளவு எபிஷோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை விட, தற்பொழுது அதன் இறுதிப் போட்டிக்கு கலந்து கொள்ளவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த விஜய் டிவி பிரியங்காவின் போட்டோக்கள் இன்ஸ்டா ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

சிறப்பு விருந்தினர்களின் வருகை
பல சமூக வலைதளவாசிகள் ஒரு சாதாரண டான்ஸ் ரியாலிட்டி ஷோவிற்கா..! இவ்வளவு பெரிய சினிமா ஜாம்பவான்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்..!? என்று குழம்பி வருகின்றனர். தற்பொழுது சினிமா தயாரிப்பதையும்,நடிப்பதையும் விட, எடுத்த சினிமாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் மக்களை நேரடியாக தேடிச் சென்று பிரமோஷன் செய்யும் வழிமுறையை பின்பற்றி வருகின்றனர்.இதில் பெரிதளவு வெற்றியும் பெற்ற வருகின்றனர். அதைத்தொடர்ந்தே தற்பொழுது பல இந்திய முன்னணி நடிகர்கள் இணைந்து மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பிரம்மாஸ்திரம் படத்திற்கான ப்ரமோஷன்களுக்காகவே அப்பட குழுவினர் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

பிரியங்காவின் திடீர் பதிவு
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வான்டட் ஆக வந்துஆட்டோவில் ஏறும் விஜய் டிவி பிரியங்கா, தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ராஜமவுலி,ரன்பீர் கபூர்,நாகர்ஜுனா என்று இந்திய சினிமாக்களின் முக்கிய பிரபலங்களை பார்த்தால் சும்மா விடுவாரா...!!? நிகழ்ச்சியின் போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன் தன்னுடைய வேலையை மிகவும் நேசிப்பதாக இவர் பதிவிட்டுள்ளதை பார்த்த இவரது ஃபாலோயர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications