பிரியங்கா என்ன பேசினாலும் ஒரு அடி நகர மாட்டேன்...கெத்து காட்டிய ராஜு...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: ராஜுவை ஏதாவது பேச வைத்து விட முடியுமா என்று ப்ரியங்கா எவ்வளவோ ட்ரை பண்ணாலும் அது முடியவே இல்லை.
தன்னுடைய பேச்சு திறமையையால் அனைவரையும் வாயடைக்க வைத்திருக்கும் பிரியங்காவிடம் வாயை மூடிக்கொண்டு சமாளித்து விட்டார் ராஜூ.
இவருடைய கேரக்டரை புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பினாலும் மறுபக்கம் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

ரசிகர்களின் மனதில் ஹீரோவா மாறிவிட்டார்
அடடா போட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டிகள் இருந்து வருகிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று தங்களுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ராஜு நான் வில்லனுக்கு எல்லாம் வில்லன் என்று சொல்வதுபோல சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சில நேரங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

சின்னத்திரையில் கத்தி
சின்னத்திரை காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயமான இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இவர் கடைசியாக நடித்துக்கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ரசிகர்கள் அப்போ நம்ம கத்தி இனி சீரியலில் நடிக்க மாட்டாரா??அல்லது அவருக்கு பதில் வேற யாரையும் மாற்றி விடுவார்களா என்று கேட்டு வந்தனர். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக யாரையும் சீரியலில் அறிமுகம் படுத்தாமல் அவர் துபாய்க்கு சென்றுவிட்டதாக கதையை ஏமாற்றிவிட்டார்கள் .

பிக்பாஸில் தான் இருக்கிறார்
காரணம் சீரியல் ரசிகர்களின் மத்தியில் அந்த கேரக்டரில் நன்றாக இவர் செட் ஆகிவிட்டார். இவருக்கு பதிலாக வேறு ஒருவர் வந்தால் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா??என்று தெரியவில்லை. அதனால் இவர் வருவது வரைக்கும் இவருக்காக கதை மாற்றப்பட்டு இருக்கிறதா??என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சீரியலில் மாயன் இவரை தேடி கொண்டிருக்கும் போது கத்தி வேறு எங்கேயும் செல்லவில்லை பிக்பாஸில் தான் இருக்கிறார் என்று பல மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் பறந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

செம திறமை
இவர் சீரியலில் தான் காமெடி நடிகர் ஆனால் சீரியஸாக முன்னணி நடிகர்களையும், வில்லன் நடிகர்களையும் மிஞ்சும் அளவில் மொத்த கலவையாக இருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் இவரை எப்படியாவது கோபப்படுத்தி விடவேண்டும் என்றும் இவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக நேற்றைய எபிசோடில் பிரியங்கா எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரு ஃபீலிங்கையும் முகத்தில் காட்டாமல் ஒரு அடி நகர மாட்டேன் என்று பெட்டில் படுத்த படி இவர் இருந்ததைப் பார்த்து பலர் மீம்ஸ்களில் இவரை கொண்டாடி வருகின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications