திருமணம் ஆன இத்தனை நாளுக்குள் இப்படி ஒரு முடிவா!! ரவீந்தர் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: புதியதாக திருமணமான தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவியை பற்றி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் புலம்ப வைத்துள்ளது.
என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இப்படியா சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வது என்று சிலர் செல்லமாக கோபித்து வருகிறார்கள்.
காதல் பைத்தியங்கள் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொண்ட ரவீந்தரை நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

இன்ஸ்டாகிராம் பதிவு
"நாங்கள் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டவர்கள் இல்லை... ஒருவருக்கொருவர் காதல் பைத்தியமாய் இருப்பவர்கள்"... என்று காதல் கவிதை பொங்க தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவி மகாலட்சுமி உடன் இணைந்து போஸ்ட் செய்துள்ள போட்டோக்களும், பதிலுக்கு மகாலட்சுமி லவ் யூ என்று கமெண்ட் செய்துள்ளதும் இன்ஸ்டாகிராமில் இனிமையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பல இனையவாசிகள் தயாரிப்பாளர் ரவீந்திரன்- மகாலட்சுமி ஜோடிக்கு அண்ணன் தம்பியாக மாறி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பலரையும் புலம்ப வைத்த திருமணம்
சில நாட்களுக்கு முன்பு சீராக போய்க் கொண்டிருந்த வலைதளங்களை சின்னாபின்னமாக புரட்டிப் போட்டது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்-மகாலட்சுமி திருமணம். இணையத்தில் அந்த அளவிற்கு எந்த திருமணமும் இதுவரை வைரல் ஆனதும் இல்லை வைரல் ஆகப்போவதும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இணையத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ரவீந்திரன் மகாலட்சுமி திருமண செய்திகள் தான் இணையத்தை ஆக்கிரமித்து இருந்தன.

பிக் பாஸ் ரிவ்யூ
தயாரிப்பாளராக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு ரிவ்யூ வழங்குவது, சமூக விஷயங்களை வலைதளங்களில் விவாதிப்பது போன்ற தான் மேற்கொண்ட பணிகளால் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இணையத்தில் வரும் ரியாக்சன் பற்றி நன்கு அறிந்திருந்தார் ரவீந்திரன்.வலைதளங்களில் வந்த அனைத்து விமர்சனங்களையும் அசால்டாக டீல் செய்தார்.கொஞ்சம் மெச்சூரிட்டியாகவே தன்னுடைய திருமண விவகாரங்கள் குறித்த கேள்விகளை எதிர்கொண்ட ரவீந்திரன்-மகாலெட்சுமியை பார்த்து பலர் அந்த ஜோடிகளை வாழ்த்தவும் செய்தனர்.

எதுகை மோனை கேப்ஷன்
திருமணத்திற்கு பின்பு குலதெய்வம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோவில் என்று பிஸியாக சுற்று கொண்டிருக்கும் ரவீந்திரன் ரிசப்ஷன் பங்க்ஷனில் இருப்பது போன்ற போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பேஜில் போஸ்ட் செய்துள்ளார்.அதற்கு அவர் போட்டுள்ள கேப்ஷன் தான் வேற லெவலில் உள்ளது."வி ஆர் நாட் மேட் ஃபார் ஈச் அதர்... வி ஆர் மேடு ஃபார் ஈச் அதர்...என்று ஆங்கிலத்தில் எதுகை மோனை கவிதை எழுதியுள்ளார். அதற்கு அவரது மனைவி மகாலட்சுமியும் லவ் யூ என்று பதில் அளித்து ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications