
பிக் பாஸ் 6: கடைசியில் ரச்சிதாவின் கணவர் நினைத்தது நடந்து விட்டதே! கடைசியில் இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: சின்னத்திரை நடிகர் தினேஷ் கார்த்திக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நினைத்த எலிமினேஷன் நடக்க இருக்கிறதாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு ராபர்ட் மாஸ்டரை வெளியேற்றி விடும்படி ரசிகர்களிடம் ரச்சிதாவின் கணவர் தினேஷ் வேண்டுகோள் வைத்திருந்தார். அவர் நினைத்ததை ரசிகர்கள் செய்திருக்கின்றனர்.
அப்போ இருந்தே "அந்த" பிரச்சனையை அனுபவித்து வருகிறார்.. விக்ரமனின் வேதனைகளை பகிர்ந்த பெற்றோர்

குழம்ப வைக்கும் செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் பழகி வருவதை குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. ரச்சிதாவை என்னுடைய கிரஷ் என்று கூறிக்கொண்டு அவரிடம் செய்யும் செயல்கள் பலருடைய முகசூழிப்பை பெரும்வகையில் தான் இருக்கிறது. என்னதான் ரச்சிதாவிடம் முத்தம் கேட்டுக் கொண்டும், போன் நம்பர் கேட்டுக் கொண்டும் ராபர்ட் மாஸ்டர் சில்மிஷ செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே தனக்கு ஒரு காதலி காத்திருக்கிறார் என்று கூறி அனைவரையும் குழம்ப வைத்திருக்கிறார்.

தினேஷின் மன வேதனை
ரச்சிதா அவருடைய கணவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரச்சிதாவிடம் அளவுக்கு அதிகமாக அத்துமீறும் ராபர்ட் மாஸ்டரின் செயலை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலர் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ரச்சிதாவின் கணவரான தினேஷும் பல வீடியோக்களில் ராபர்ட் மாஸ்டர் மீது தனக்கு இருக்கும் கோபத்தையும் இவர்களுடைய செயல்களால் தங்களுடைய குடும்பத்தினர் எத்தனை பேர் இதை பார்த்துக் கொண்டு மனவேதனை அடைவார்கள் என்பதை குறித்தும் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் நாமினேஷன் லிஸ்டில் வந்திருந்தார். போதும் அவரை வெளியேற்ற விட வேண்டும் என்பதற்காக தினேஷ் தன்னுடைய ஆதரவு நிவாவுக்கு தான் என கூறி இருந்தார்.

இந்த வாரமும் அதே நிலையில்
இந்த நிலையில் இந்த வாரமும் ராபர்ட் மாஸ்டர் எலிமினேஷனில் லிஸ்டில் இருக்கிறார். அதற்கு காரணம் அதில் ஒருவராக ரச்சிதாவும் இருந்து வந்தார்.ஓபன் நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டரின் பெயரை அனைவரின் முன்னிலையிலும் ரச்சிதா கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ராபர்ட் மாஸ்டர் இங்கே வந்து விளையாட வேண்டிய விளையாட்டை விளையாடவில்லை என்று மறைமுகமாகவே அவருக்கு பதிலை கூறியிருந்தார். தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் வெளியே செல்வதில் எந்த தப்பும் இல்லை என்று அவர் கூறியதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதையே ஸ்டோரியாக வைத்து இருந்தார். இந்த வாரம் நாமினேஷனில் அமுதவாணன், மணிகண்டன், அசீம், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம் மற்றும் கதிரவன் போன்றோர் இருக்கின்றனர்.

நினைத்தது நடந்து விடும் போல
தினேஷ் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ராம் அல்லது மணிகண்டனுக்கு ஓட்டு போட சொல்லி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். தான் ராமுக்கு ஓட்டு போட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதில் பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களாகவே ராம் கடைசி இடத்தில் இருந்தால் அவரை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் இருந்தார். அவரை தொடர்ந்து அமுதவாணன் கதிரவன் என இருந்தனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் தான் குழப்பமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி கடைசி இடத்தில் ராபர்ட் மாஸ்டர் தான் இருந்து வருகிறார் .அதனால் இந்த முறை இவர் வெளியேறுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் ஒரு வழியாக ரச்சிதாவின் கணவரான தினேஷ் ஆசைப்பட்டது நடக்க இருக்கிறது .ஆனாலும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்லும் பிக்பாஸில் கடைசி நேரத்தில் மாற்றம் நிகழ்ந்து விடுமோ என்று பலரும் கேள்வியோடு தான் காத்திருக்கின்றனர்.