ராஜு- பூ, அண்ணாச்சி- நார்...பங்கமாக கலாய்த்த பிரியங்கா
சென்னை: கிடைக்கிற கேப்பில் அண்ணாச்சியை கலாய்த்துவிட்டார் பிரியங்கா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ராஜ்கூட இருப்பதால்தான் அண்ணாச்சிக்கு மதிப்பு என்று இப்படி குத்தி காட்டியிருக்கிறாரா பிரியங்கா என்று பெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
பழமொழிக்கு விளக்கம் கேட்ட ராஜூவுக்கு எடுத்துக் காட்டு கூறிய பிரியங்காவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கேரக்டராக மாறிய பிரியங்கா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அப்படியே பள்ளி வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டு வந்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் இதில் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் சுவாரசியமான பல காமெடி நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக தான் பிரியங்காவை ஸ்டூடன்ட் ஆக நடிக்க சொன்னதற்கு ஸ்டூடண்ட் ஆகவே மாறியிருக்கிறார்.

ரசிக்க வைத்த அன்சீன்
கனா காணும் காலங்கள் டாஸ்கில் ஒருசில போட்டியாளர்கள் அப்படியே கேரக்டராக மாறிவிட்டனர். அதில் பிரியங்கா, சிபி, ராஜூ உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் தங்களுடைய கேரக்டரில் செய்யும் குறும்புகள் வேற லெவல் வைரலாகி வருகிறது. நேற்றைய எபிசோடுகளில் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா விற்கும் சிபிக்கும் நடந்த சண்டை சச்சரவுகள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் அதற்கு அடுத்ததாக அன்சீனில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் அனைவரையும் ரசிக்க வைத்து சிரிக்க வைத்திருக்கிறது.

குறும்புக்கார மாணவி பிரியங்கா
பிரியங்கா தனக்கு எந்த தண்டனைகளையும் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் அதை அசட்டை செய்யும் ஒரு குறும்புக்கார மாணவியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் நேற்று அண்சீன் எபிசோடில் ராஜு தமிழ் வகுப்பில் பழமொழிகளை பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரியங்கா செய்த சேட்டை அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இவர் எப்போதும் இப்படிதானா அல்லது இப்படித்தான் எப்போதுமா என்று எடக்கு மடக்கான கேள்விகளை ரசிகர்கள் இவரை பார்த்து சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.
Recommended Video

டைமிங் காமெடி
ராஜு பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும், இதற்கு அர்த்தம் சொல்லுங்கள் என்று பிரியங்காவிடம் கேள்வி கேட்பதற்கு கங்கா அசால்டாக நீங்கள் பூ சார், அண்ணாச்சி நாரு சார் உங்களோடு சேர்ந்து அவரும் வாசம் வீசி கொண்டிருக்கிறார் என்று தன்னுடைய அண்ணாச்சி மீதுள்ள பகையை தீர்த்துக் கொண்டார். இவர் சொன்ன பதிலுக்கு கொஞ்சம் கூட முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனையும் காட்டாத ராஜு அப்படியே அண்ணாச்சியிடம் பிரியங்காவின் கருத்துக்கு என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணாச்சி இதை வன்மையாக கண்டிக்கிறேன் சார் என்று கூறியுள்ளார், அப்படின்னா என்ன பூ இல்லை என்று சொல்கிறீர்களா??என்று ராஜு தனக்கே உரிய நக்களோடு கேட்டிருக்கிறார். அப்படி இல்ல சார், நான் நார் இல்லை என்று கூறுகிறேன் என்று அண்ணாச்சி கூறியிருக்கிறார். இந்த டைமிங் காமெடியை பார்த்து ரசிகர்கள் பலர் ரசித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications