அபிஷேக்கை பக்கத்தில் வைத்துக்கொண்டு...பிரியங்காவுக்கு அட்வைஸ் செய்த ராஜு...காண்டான அபிஷேக்
சென்னை: யார் எப்படி என்று பிரியங்காவிற்கு ராஜு அறிவுரை கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இதை தான் இவருடைய தம்பி சொல்லி அனுப்பினார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தன்னைத்தான் சொல்கிறார் என்று தன்னுடைய வழக்கமான பாணியை தொடங்கிவிட்டார் அபிஷேக்.

திறமையான தொகுப்பாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் பிரியங்காவிற்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் ஆதரவு கொடுத்து வந்தனர். இவர் ஒரு தொகுப்பாளராக இருந்தாலும் வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு இருக்கும் ரசிகர்கள் இவருக்கும் இருந்து வந்தனர். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியில் வந்தாலும் இவருடைய நிகழ்ச்சி பட்டையை கிளப்பி விடும். அந்த அளவில்தான் தன்னுடைய கலகலப்பான பேச்சுத் திறமையினால் பார்ப்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். பாட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, டான்ஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய பர்பாமன்ஸ் கெவியாக இருக்கும் என்பதை ஒவ்வொரு முறையும் பிரியங்கா நிரூபித்து கொண்டிருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
விஜய் டிவியில் பிஸியாக இருந்த இவர் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானதும் இவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் இவருக்கு ஆதரவு கொடுக்க நாங்க ரெடி என்று பலர் அதற்கு முன்பு இல்லாததை விடவும் அதிகமாக தான் பேன்ஸ் பேஜ்களை ஓபன் செய்து விட்டனர். ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சியில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். தன்னுடைய கலகலப்பு மாறாமல் எப்போதுமே இவர் இருக்க வேண்டும் என்று தான் இவருடைய ரசிகர்கள் இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் அவர் என்னுடைய கேரக்டரில் நான் எங்கே இருந்தாலும் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

சோகத்தையும் மறக்க வைப்பவர்
இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். காரணம் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக இருக்கும் இவருடைய கேரக்டரால் இந்த நிகழ்ச்சியை சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிவந்தனர். சோகமாக இருப்பவர்களையும சிரிக்க வைத்து அங்கே கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஜொலித்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென்று தற்போது இரண்டு நாட்களாகவே இவர் அபிஷேக் உடன் சேர்ந்த பிறகு இவருடைய கேரக்டர் மாறிவிட்டது என்று சக போட்டியாளர்கள் கூறி வருகின்றனர். இதுதான் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

அறிவுரை கேட்கப்படுமா??
இந்த நிலையில் இன்றைய ப்ரமோவில் ராஜு பிரியங்காவிடம் அறிவுரை கூறியிருக்கிறார். அதைப் பார்த்து அபிஷேக் காண்டாகி விட்டார். காரணம் அபிஷேக்கை காரணம் காட்டித்தான் பிரியங்காவிடம் பட்டும்படாமலும், தெளிவாகவும், தனியாகவும் இருக்கும்படி கூறி வருகின்றனர். இது அபிஷேக்குக்கு கோபத்தை ஏற்படுத்தி தன்னுடைய வழக்கமான கேரக்டரை தொடங்கிவிட்டார். ஆனால் இது தப்பு என்று அண்ணாச்சியும் தன்னுடைய பங்குக்கு கொளுத்திப் போட்டு இருக்கிறார். என்னதான் ப்ரமோவில் இவர்கள் சண்டை போட்டாலும் கடைசியில் எபிசோட்டில் ஒன்றுமில்லாமல் இருந்து விடுகிறது. அதனால் இன்றாவது ப்ரமோவுக்கும் எபிசோடுக்கும் கொஞ்சமாவது சம்பந்தமாக ஏதாவது இருக்குமா என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications