கோபம் வந்தாலும் அமைதியாக இரு...தாமரைக்கு புத்தி சொன்ன ராஜு..
சென்னை: தாமரையின் கோபம் தான் அவருக்கு கேடு என்பதை புரிந்து பக்குவமாய் அறிவு கூறியிருக்கிறார் ராஜு.
ஏற்கனவே இந்த வாரம் கமல் தாமரைக்கு அறிவு கூறிய நிலையில் ராஜூ அட்வைஸ் செய்திருப்பது வேற லெவல் தான்.
ஏற்கனவே பலமுறை இந்த மாதிரி ராஜூ சொல்லிவிட்டார் இனியாவது தாமரை கேட்பாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

குறைவில்லாத சண்டைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு குறையில்லாமல் தான் நடந்து கொண்டிருக்கிறது. புது போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் தாமரைச் செல்வியின் அட்டகாசம் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இவர் ஆரம்பத்தில் வெகுளி யாகவும், வெள்ளந்தியாகவும் இருக்கிறார் என்று கூறி வந்த ரசிகர்கள் தற்போது இவர் கோபத்தின் உச்சியில் பல நேரங்களில் இருந்து கொண்டிருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

அப்போ அபிஷேக் இப்போ தாமரை
ஆரம்பத்தில் அபிஷேக் இதே வேலையை செய்து கொண்டிருந்தால் தற்போது அவர் வெளியே சென்ற பிறகு தாமரைச்செல்வி அவரைப் போல அடிக்கடி சவுண்டு விட்டு கலவரப் படுத்தி வருகிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் எந்த ஒரு பிரச்சனையிலும் அதிகமாக கோபப்பட்டு இவர் பேசும் வார்த்தைகள் பல நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அடிக்கடி ப்ரமோக்களில் இவருடைய கணீர் குரல் உரைத்துக் கொண்டிருக்கிறது.

கமலின் அறிவுரை
கடந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் கூட கமல், தாமரைச்செல்வியிடம் கூறியிருந்தார். ஏற்கனவே இவருக்கு ராஜு மற்றும் பிரியங்கா போன்ற பல போட்டியாளர்கள் தொடர்ந்து இவருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தாலும், இவர் சில நேரங்களில் இவரையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விடுகிறார். இதுதான் இவர் மீது சக போட்டியாளர்களும், ரசிகர்களும் கூறும் குறையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தாமரைச்செல்வி யை பலர் நாமினேஷன் செய்வதற்கு காரணம் அவர் காட்டும் கோபம் தான் இருந்து வருகிறது.

ராஜுவின் அறிவுரை
நேற்றைய அன்சீனில் தாமரை செல்விக்கு பக்குவமாக கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ராஜு கூறிக்கொண்டு வருகிறார். பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ராஜுவும் எத்தனையோ முறை சொல்லிக் கொண்டு இருந்தாலும் தாமரை கொஞ்சம் கூட மாறுகிற மாதிரி தெரியவில்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் உன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். என்னதான் நீ கோபமாக இருந்தாலும் அதை வார்த்தைகளில் காட்டக்கூடாது. உன் மனதில் உள்ளதை புதைத்துவிடு என்றெல்லாம் இருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு தாமரைச்செல்வி எல்லாமே சரி என்பது போல தலையை ஆட்டிக் கொண்டு இருக்கிறார். பொருத்து இருந்து பார்த்தால்தான் தெரியும் அறிவுரை வேலை செய்கிறதா இல்லையா என்று என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications